ரஷ்ய போர் ஹெலிகாப்டர்களை சுட்டு வீழ்த்திய உக்ரைன்: பரபரப்பு வீடியோ ஆதாரம்
அமைதி பேச்சுவார்த்தைகளில் முடிவு எட்டப்படாத நிலையில், ரஷ்யா உக்ரைன் போரானது உச்சநிலையை எட்டியுள்ளது. அந்த வகையில் உக்ரைன் ராணுவ வீரர்கள் ரஷ்யாவின் இரண்டு போர் ஹெலிகாப்டர்களை சுட்டிவீழ்த்தியுள்ளனர்.
ரஷ்யா உக்ரைன் இடையே இன்று 6வது நாளாக இன்றும் போர் தொடரும் நிலையில், இரு நாடுகளுக்கு இடையிலான சண்டை தற்போது உச்சநிலையை எட்டியுள்ளது.
Two #Russian helicopters will no longer take to the air. pic.twitter.com/ohggPrQqGG
— NEXTA (@nexta_tv) March 1, 2022
உக்ரைனின் தலைநகர் கிளிவ்வை ரஷ்யா ராணுவ துருப்புகள் சுற்றி வளைத்துள்ளதாக அறிவித்திருந்த நிலையில், பெலாரஸ் நாட்டில் உக்ரைனை அமைதி பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா அழைத்தது.
இதனை தொடர்ந்து, நடந்து முடிந்த பேச்சுவார்த்தையில் எத்தகைய முடிவும் எட்டப்படாத நிலையில், ரஷ்யா உக்ரைனின் தலைநகர் கிளிவ்வின் கிழக்கே சுமார் 40 மைல் நீளத்திற்கு தனது படை துருப்புகளை அனுப்பிவைத்து 06வது நாளாக இன்றும் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்தநிலையில் உக்ரைனுக்குள் வரிசையாக நுழைந்த ரஷ்யாவின் போர் ஹெலிகாப்டர்கள் இரண்டினை உக்ரைன் ராணுவ வீரர்கள் சுட்டுவீழ்த்தியுள்ளனர்.
மேலும் இது தொடர்பான வீடியோ ஆதாரத்தையும் உக்ரைன் ராணுவத்தினர் வெளியிட்டுள்ளனர்.