வெவ்வேறு நாட்டில் குடும்பத்தோடு இறந்து கிடந்த 2 ரஷ்ய குடும்பங்கள்! நீடிக்கும் மர்மம்., தொடரும் விசாரணை
வெவ்வேறு நாடுகளில் 24 மணிநேர இடைவெளியில் தங்கள் மனைவிகள் மற்றும் குழந்தைகளுடன் இறந்து கிடந்த இரண்டு ரஷ்ய தன்னலக்குழுத் தலைவர்கள் மரணம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மற்றும் ஸ்பெயினில் உள்ள தங்கள் ஆடம்பர வீடுகளில் ரஷ்ய எதேச்சதிகார தலைவர்களான Vladislav Avayev மற்றும் Sergey Protosenya மற்றும் அவர்களது குடும்பத்தினர் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.
புலனாய்வாளர்கள் தற்கொலைகள் அல்லது திட்டமிட்ட கொலை போன்ற அனைத்து கோணங்களையும் ஆராய்ந்து வருகின்றனர்.
உக்ரைன் போர் தொடர்பாக பல்வேறு ரஷ்ய தன்னலக்குழுக்கள் மீது பல தடைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் வெளிவந்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மாஸ்கோவில், தனியாருக்குச் சொந்தமான ரஷ்ய வங்கியான Gazprombank-ன் முன்னாள் துணைத் தலைவரான Avayev, திங்களன்று அவரது குடியிருப்பில் அவரது மனைவி மற்றும் மகளுடன் இறந்து கிடந்தார். இறந்தவர்கள் அனைவருக்கும் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் இருந்தன.
Vladislav Avayev
Avayev தனது குடும்ப உறுப்பினர்களை முதலில் சுட்டுவிட்டு பின்னர் தன்னைத்தானே சுட்டுக் கொன்றிருக்கலாம் என நினைத்து தற்கொலை கோணத்தில் பொலிஸார் விசாரணை நடத்துகின்றனர்.
அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணவில்லை, ஆனால் ரஷ்ய செய்தி நிறுவனங்கள் அது அவயேவ் மற்றும் அவரது குடும்பத்தினர் என்று ஆதாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளன.
அடுத்த நாள், 2,000 மைல்களுக்கு அப்பால், Protosenya-வும் அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக ஸ்பானிஷ் தொலைக்காட்சி சேனல் டெலிசின்கோ தெரிவித்துள்ளது.
Protosenya
ஓலிகார்ச்சின் மனைவி மற்றும் மகளும் கத்தியால் குத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். புரோட்டோசென்யாவின் உடலின் பக்கத்தில், ரத்தக்கறை படிந்த கத்தி மற்றும் கோடாரி கண்டுபிடிக்கப்பட்டது.
ஸ்பானிய அதிகாரிகளும் புரோட்டோசென்யா தனது குடும்பத்தைக் கொன்று தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோட்பாட்டில் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.