ஜேர்மனியில் கூட்டம் ஒன்றில் பங்கேற்ற ரஷ்யர்கள் இருவருக்கு விஷம் வைக்கப்பட்டதாக சந்தேகம்
ரஷ்யாவிலிருந்து வெளியேறி தலைமறைவாக வாழும் ரஷ்யர்கள் சிலர் ஜேர்மனியில் கூட்டம் ஒன்றில் பங்கேற்றபோது உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு விஷம் வைக்கப்பட்டிருக்கக்கூடும் என்ற கோணத்தில் பொலிசார் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.
இருவருக்கு உடல் நலம் பாதிப்பு
ஜேர்மன் தலைநகர் பெர்லினில், ரஷ்யாவிலிருந்து வெளியேறி தலைமறைவாக வாழும் ரஷ்யர்கள் சிலர், கிரெம்ளினை விமர்சிப்பவரான Mikhail Khodorkovsky என்பவர் ஏற்பாடு செய்திருந்த கூட்டம் ஒன்றில் பங்கேற்றனர்.
அப்போது, கூட்டத்தில் பங்கேற்ற ஊடகவியலாளரான ஒருவர் மற்றும் தொண்டு நிறுவனம் ஒன்றில் இயக்குநரான Natalia Arno என்னும் இருவருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டது.ஆகவே, அவர்களுக்கு விஷம் கொடுக்கப்பட்டிருக்குமா என்ற கோணத்தில் ஜேர்மன் அதிகாரிகள் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.