சுட்டு வீழ்த்தப்பட்ட 101 உக்ரைனிய ட்ரோன்கள்: குடியேற்றங்களில் இருந்து 1200 ரஷ்யர்கள் வெளியேற்றம்
உக்ரைனிய ட்ரோன் தாக்குதல்கள் ரஷ்யாவில் தீ விபத்து மற்றும் பயங்கர வெடிப்புகளை ஏற்படுத்தியுள்ளன.
உக்ரைன் ட்ரோன் தாக்குதல்
ரஷ்யா பிராந்தியத்திற்குள் உக்ரைன் சமீபத்தில் நடத்திய அடுத்தடுத்த ட்ரோன் தாக்குதல்கள் நாட்டின் முக்கிய பகுதிகளில் தீ விபத்து மற்றும் பயங்கர வெடிப்புகளை ஏற்படுத்தி இருப்பதாக மாஸ்கோ பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
முதல் ட்ரோன் தாக்குதல் நாட்டின் உட்பகுதியான ட்வெர்(Tver) பிராந்தியத்தில் உள்ள ஏவுகணை கிடங்கை குறிவைத்தது.
இரண்டாவது ட்ரோன் தாக்குதல் ரஷ்யாவின் தென்மேற்கு பிராந்தியமான கிராஸ்னோடரை(Krasnodar) குறிவைத்தது.
இரவு தாக்குதலின் போது ரஷ்ய பிரதேசத்தின் மீது 101 உக்ரைனிய ட்ரோன்களை தாக்கி வீழ்த்தியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
1200 பேர் வெளியேற்றம்
உக்ரைனின் இரண்டாவது ட்ரோன் தாக்குதலில் வெடிமருந்து கிடங்கு மற்றும் ஏவுகணை ஆயுதக் களஞ்சியம் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, குறைந்தது 1,200 பேர் ரஷ்யாவின் தென்மேற்கு கிராஸ்னோடர் பிராந்தியத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாக உள்ளூர் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இரண்டாவது ட்ரோன் தாக்குதலின் காட்சிகள் தீ மற்றும் தொடர் வெடிப்புகளை காட்டுகின்றன.
ட்வெரில் (Tver) உள்ள ஏவுகணை கிடங்கில் ஏற்பட்ட தீயை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அணைத்ததாக தெரிவித்துள்ளது. இரு தாக்குதல்களிலும் உயிர் சேதம் குறித்த எந்த தகவலும் இல்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |