இன்னும் இரண்டே வாரத்தில் முடித்து விடுவோம்... ஈரான் போர் தொடர்பில் ட்ரம்ப்
ஈரானை இன்னும் இரண்டே வாரத்தில் மொத்தமாக முடித்துவிட்டு அமெரிக்கா மிக விரைவில் அங்கிருந்து வெளியேறும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
முடித்து விடுவோம்
அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் அமெரிக்கா வெளியேறிவிடும் என்றும், ஈரானிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் ட்ரம்ப் நிர்வாகம் ஈரான் மீது வான்வழித் தாக்குதல் நடவடிக்கைகளைத் தொடர்ந்தபடியே உள்ளது. ஈரான் போர் தொடர்பில் வெள்ளை மாளிகையில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள ட்ரம்ப்,
ஈரானில் இருந்து மிக விரைவில் வெளியேற இருக்கிறோம், அந்த ஆட்சி உடனே சரிந்துவிடும் என்றார். எங்கள் வேலையை நாங்கள் சிறப்பாக முடித்து விட்டோம், இன்னும் இரண்டே வாரத்தில், அல்லது இன்னும் சில தினங்களில் ஈரானை முடித்து விடுவோம் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
உருவாக்க முடியாது
மேலும், ஈரானுடன் எந்தவொரு உடன்பாட்டையும் எட்டுவதைப் பொறுத்து அமெரிக்க நடவடிக்கைகளின் முடிவு அமையாது என்றும் ட்ரம்ப் கூறினார். அவர்கள் தம்முடன் ஒரு உடன்பாட்டிற்கு வர வாய்ப்பில்லை என்பதை குறிப்பிட்ட ட்ரம்ப்,
அவர்களால் எந்த காலத்திலும் அணு ஆயுதத்தை உருவாக்க முடியாது என்ற நிலைக்கு வந்ததன் பிறகு நாங்கள் அங்கிருந்து வெளியேறிவிடுவோம் என்றார்.

அவர்களுடன் ஒப்பந்தம் ஏற்பட்டாலும் இல்லை என்றாலும், அது சம்பந்தமில்லாதது என்றார். ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிக்காது என உறுதியளிப்பது, அனைத்து யுரேனியம் செறிவூட்டலையும் நிறுத்துவது மற்றும் ஹார்முஸ் நீரிணையை முழுமையாக மீண்டும் திறப்பது ஆகியவற்றை முக்கிய கோரிக்கைகளாகக் கொண்ட 15 அம்ச அமெரிக்கப் போர்நிறுத்த உடன்பாட்டை ஈரான் ஏற்கவில்லை என்றால், இராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதாக அமெரிக்கா முன்னர் அச்சுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |