பிரித்தானியாவில் பதவியிறக்கம் செய்யப்பட்ட இரண்டு இந்திய வம்சாவளி பெண் அரசியல்வாதிகள்
பிரித்தானியாவில் எதிர்க்கட்சி உறுப்பினர்களாக இருந்த இரண்டு இந்திய வம்சாவளி பெண் அரசியல்வாதிகள் பதவியிறக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.
யார் அந்த அரசியல்வாதிகள்?
பதவியிறக்கம் செய்யப்பட்டவர்களில் முதல் பெண், Lisa Nandy (44). இவர் இந்தியாவின் கொல்கொத்தாவில் பிறந்த கல்வியாளரான Dipak Nandy என்பவருடைய மகள் ஆவார்.
பதவியிறக்கம் செய்யப்பட்ட இரண்டாவது பெண், Preet Kaur Gill (50). இவரது தந்தையான Daljit Singh Shergill, இந்தியாவின் பஞ்சாபிலுள்ள ஜலந்தரிலிருந்து பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்தவர் ஆவார்.
Preet Kaur Gill பிரித்தானியாவின் முதல் சீக்கிய பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.
எதனால் பதவியிறக்கம்?
இந்த இருவருமே பிரித்தானியாவின் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆவர். அதாவது, பிரித்தானியா போன்ற சில மேலைநாடுகளில், நிழல் கேபினட் (shadow cabinet) என்னும் ஒரு அமைப்பு உள்ளது.
ஆளுங்கட்சியில் எப்படி ஒவ்வொரு துறைக்கு ஒரு அமைச்சர் இருப்பாரோ, அதேபோல, இந்த நிழல் அமைச்சரவையிலும் அமைச்சர்கள் இருப்பார்கள்.
அவ்வகையில், shadow levelling up secretary என்னும் உயர்ந்த பொறுப்பிலிருந்த Lisa Nandyக்கு, தற்போது, சர்வதேச மேம்பாட்டு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.
முன்பு சர்வதேச மேம்பாட்டு அமைச்சர் பதவியை வகித்தவர், Preet Kaur Gill. அவர் இப்போது பதவியேதும் இல்லாத நாடாளுமன்ற உறுப்பினர் என்ற நிலைக்கு இறக்கப்பட்டுள்ளார்.
பிரித்தானியா இந்த ஆண்டில் பொதுத்தேர்தலை எதிர்நோக்கியுள்ளதால், கட்சித்தலைவர்கள் அதற்கேற்ப காய் நகர்த்திவருகிறார்கள்.
அவ்வகையில், எதிர்க்கட்சியான லேபர் கட்சியின் தலைவரான Sir Keir Starmer தனது கட்சியில் செய்துவரும் மாற்றங்கள், இந்த இரண்டு இந்திய வம்சாவளி அமைச்சர்களுக்கும் பாதகமாக அமைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |