ஆபத்தை அறியாமல் 2 வயது குழந்தை செய்த செயல்! பதறியடித்துச் சென்று காப்பாற்றிய தந்தை
அமெரிக்காவில் 2 வயது குழந்தை முதலையுடன் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் அவரது தந்தையால் காப்பாற்றப்பட்டார்.
அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த ஜாக்சன்வில் நகரத்தில் உள்ள கான்டினா உணவகத்திற்கு வெளியே உள்ள சிற்றோடைக்கு அருகே இரண்டு வயது குழந்தை ஒன்று முதலையுடன் விளையாடிக் கொண்டிருந்தது.
தனது மகன் விளையாடிக் கொண்டிருந்த விலங்கு ஒரு முதலை என்பதை கவனித்த தந்தை ஜோ பிரென்னர் (Joe Brenner), பதறியடித்துக்கொண்டு சென்று குழந்தையை உடனடியாக வடிகாலில் இருந்து தூக்கிக் சென்றார்.
வடிகாலில் சிக்கிய முதலை வெளியே வர முயன்றது. ஆனால், அதிர்ஷ்டவசமாக குழந்தை காயமின்றி தப்பியது.
குழந்தை வடிகாலில் இருந்த அந்த முதலையை, ஆமை என்று நம்பி அதனிடம் விளையாட நினைத்துள்ளது.
சம்பவத்தின் போது தந்தை அதிர்ச்சியில் இருந்தார், ஆனால் சரியான நேரத்தில் அவர் எடுத்த நடவடிக்கை ஒரு மிகப்பெரிய இழப்பிலிருந்து அவரை காப்பாற்றியது.
பின்னர், விலங்குகள் மீட்புக் குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, அவர்கள் முதலையை மீட்டனர். இந்த முதலை எப்படி நகரத்தில் உள்ள வடிகாலில் வந்தது என்பதை அதிகாரிகள் இப்போது ஆய்வு நடத்தி வருகின்றனர்.
சமீபத்தில் இங்கிலாந்தின் யார்க்ஷயரில் நடந்த இதேபோன்ற ஒரு சம்பவம் நடந்தது. ஒரு பெண் தனது வீட்டிற்கு வெளியே நான்கு அடி நீளமுள்ள முதலை சுற்றித் திரிவதைக் கண்டார்.