சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து... லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம்
நௌல் புயல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் கரையைக் கடந்த நிலையில், ஹொங்ஹொங் உள்ளிட்ட தெற்கு சீனாவில் பலத்த காற்றும் கனமழையும் இயல்பு வாழ்க்கையை மொத்தமாகப் புரட்டிப்போட்டுள்ளது.
உயர் எச்சரிக்கை
நௌல் புயல் காரணமாக குவாங்டாங் மாகாணத்தில் லட்சக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர்; அப்பகுதி உயர் எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டதோடு, நூற்றுக்கணக்கான விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.

தெற்கு குவாங்டாங் மாகாணத்தில் ஹுய்ஜோ நகரின் ஹுய்டோங் மாவட்டக் கடற்பகுதியில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமார் 3:50 மணியளவில் நௌல் புயல் கரையைக் கடந்ததாக சீனாவின் தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, இந்த ஆண்டில் இதுவரை சீனாவில் கரையைக் கடந்த புயல்களிலேயே நௌல் மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்தது என்று சீனாவின் உத்தியோகப்பூர்வ செய்தி நிறுவனமான சின்ஹுவா தெரிவித்துள்ளது.
மணிக்கு 110 கி.மீ வேகத்தில் அதிகபட்ச தொடர் காற்றுடன் வீசிய நௌல் புயல், ஞாயிற்றுக்கிழமையன்று குவாங்டாங்கின் உள்பகுதிக்குள் நகர்ந்து படிப்படியாக வலுவிழந்துள்ளதாகவும், இதனால் அப்பகுதியின் சில பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கனமழை பெய்து வருவதாகவும் ஹொங்ஹொங் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரசு வானொலி வெளியிட்டுள்ள தகவலில் குவாங்டாங் மாகாணத்தில் பாதுகாப்பு கருதி 715,000-க்கும் மேற்பட்ட மக்கள் குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பலத்த காற்றும் மழையும்
அப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமைக்கான ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. குவாங்டாங் மாகாணத்தின் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள ஹுய்லாய் (Huilai) மாவட்டத்தில் பல மரங்கள் வேரோடு சாய்ந்து கிடந்ததாக அரசு செய்தி நிறுவனமான சிசிடிவி (CCTV) செய்தி வெளியிட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமையன்று சுமார் 350 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக ஹொங்ஹொங் விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. சூறாவளி வீசிய காலத்தில் நகரம் முழுவதும் குறைந்தது ஒன்பது பேர் காயமடைந்ததாக ஹொங்ஹொங் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த மாதத் தொடக்கத்தில், Bavi சூறாவளி பலத்த காற்று மற்றும் மழையுடன் கிழக்கு சீனாவைப் புரட்டிப்போட்டதால், 20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
இது ஜூலை 11 அன்று கரையை அடைந்தது. மற்றொரு சூறாவளியான 'மேசக்' (Maysak), ஜூலை 3 அன்று தென் சீனாவில் கரையை அடைந்தது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |