ரஷ்யாவுக்கு உதவினால் இது தான் கதி! சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
ரஷ்யாவுக்கு உதவினால் கடும் வினைவுகளை சந்திக்க நேரிடும் என சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
உக்ரைன் எல்லைக்கு அருகே ரஷ்யா அதன் படைகளை நிலை நிறுத்தியுள்ளதால் இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் நிலவி வருகிறது.
உக்ரைன் மீது படையெடுத்தால், ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என மேற்கத்திய நாடுகள் எச்சரித்துள்ளன.
இந்நியைில், வியாழன் அன்று பெய்ஜிங்கில் நடந்த ரஷ்யா-சீனா வெளியுறவு அமைச்சர்களுக்கு இடையேயான சந்திப்பின் போது, உக்ரைன் மீதான தங்கள் நிலைப்பாட்டில் சீனாவும் ரஷ்யாவும் ஒருங்கிணைத்துள்ளதாக சீன வெளியுறவு அமைச்சகம் கூறியது.
இதனையடுத்து, அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ், சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நெட் பிரைஸ் கூறியதாவது, ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிக்கும் பட்சத்தில், ரஷ்யா மீது விதிக்கப்படும் ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளைத் தவிர்க்க சீன நிறுவனங்கள் முயன்றால், அந்ந நிறுவனங்கள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்தார்.
சீனாவுடன் நெருக்கமான உறவு கொண்டிருப்பதன் மூலம், உக்ரைன் மீது படையெடுப்பிற்குப் பதிலடியாக அந்நாட்டின் மீது சுமத்தப்படும் பொருளாதார தடைகளை ஈடுசெய்யாது என்பதை ரஷ்யா அறிய வேண்டும் என பிரைஸ் கூறினார்.