இலங்கையை வீழ்த்திய இந்தியா - பாகிஸ்தானுடன் இறுதிப்போட்டியில் மோதல்
U19 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் டிசம்பர் 12 ஆம் திகதி தொடங்கி டிசம்பர் 21 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.
இந்தியா U19 vs இலங்கை U19
இன்று நடைபெற்ற அரை இறுதி போட்டியில் இந்தியா U19 அணி மற்றும் இலங்கை U19 அணி மோதியது.
நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதன்படி, முதலில் துடுப்பாட்டம் ஆடிய இலங்கை அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 138 ஓட்டங்கள் குவித்தது.
இலங்கை தரப்பில், அதிகபட்சமாக சாமிக ஹீனடிகல 42 ஓட்டங்கள் குவித்தார்.
அதைத்தொடர்ந்து, 139 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 18 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்களை மட்டுமே இழந்து 139 ஓட்டங்கள் குவித்து வெற்றி பெற்றது.

அதிகபட்சமாக, ஆரோன் வர்கீஸ் 58 ஓட்டங்களும், விஹான் மல்கோத்ரா 61 ஓட்டங்களும் குவித்தனர்.

8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, வரும் டிசம்பர் 21 ஆம் திகதி நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |