30 பேர்கள் கொண்ட Whatsapp நண்பர்கள் குழு... லொட்டறியில் மொத்தமாக ரூ 45 கோடி அள்ளி சாதனை
ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்றும் 30 பேர்கள் கொண்ட இந்திய நண்பர்கள் குழுவானது லொட்டறியில் மொத்தமாக ரூ 45 கோடி தொகையை அள்ளி சாதித்துள்ளது.
20 மில்லியன் திர்ஹாம்
இந்தியரான Munavar Fairoos என்பவர் தலைமையில் சுமார் 40 பேர்கள் கொண்ட Whatsapp குழுவானது ஒவ்வொரு மாதமும் Dh20 மில்லியன் பரிசு தொகைக்கான லொட்டறி சீட்டு ஒன்றை வாங்கி வந்துள்ளது.
இந்த நிலையில் 2019ல் தொடங்கப்பட்ட இந்த குழுவினருக்கு தற்போது, டிசம்பர் 31 லொட்டறியில் 20 மில்லியன் திர்ஹாம் (ரூ 45 கோடி) பரிசாக கிடைத்துள்ளது. Munavar Fairoos குழுவினர் 1000 திர்ஹாம் செலவிட்டு 2 லொட்டறி சீட்டுகளை வாங்கியுள்ளனர்.
பொதுவாக இரண்டு லொட்டறி சீட்டு வாங்கினால் ஒன்று இலவசமாக அளிக்கப்படும் நிலையில், டிசம்பர் மாதம் 2 சீட்டுகள் இலவசாக கிடைத்துள்ளது. 2019ல் தான் முனவர் ஃபைரூஸ் முதல் முறையாக பெருந்தொகை பரிசு கொண்ட லொட்டறி சீட்டு வாங்கத் தொடங்கியுள்ளார்.
Credit: khaleejtimes
ஐவர் கொண்ட குழு அப்போது 500 திர்ஹாம் செலவிட்டு லொட்டறி சீட்டு வாங்கியுள்ளனர். அதன் பின்னர் ஒவ்வொரு மாதமும் லொட்டறி சீட்டு வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார் முனவர் ஃபைரூஸ்.
30 பேர்கள் மட்டும்
ஆனால் ஒவ்வொரு மாதமும் 100 திர்ஹாம் லொட்டறிக்கு என செலவிட முடியாத சூழலில், முனவர் ஃபைரூஸ் ஒரு முடிவுக்கு வந்தார். அதாவது லொட்டறி வாங்க ஆர்வம் கொண்ட பல நண்பர்களை குழுவாக இணைத்துக் கொண்டு மாதா மாதம் லொட்டறி வாங்குவது என்று.
அப்படியாக நண்பர்கள், உடன் பணியாற்றுவோர் மற்றும் விருப்பம் தெரிவித்தவர்கள் என ஒரு Whatsapp குழுவை உருவாக்கியுள்ளார். இதில் சிலரை இதுவரை நேரில் சந்தித்ததும் இல்லையாம்.
மட்டுமின்றி, இந்த 40 பேர்கள் கொண்ட குழுவில் சிலர் தற்போது ஐக்கிய அமீரகத்தில் பணியாற்றவில்லை என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், ஒவ்வொரு மாதமும் அவர்கள் லொட்டறிக்கான பணத்தை அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், ஒவ்வொரு மாதமும் பொருளாதார நிலை கருதி சிலர் பங்கேற்பதில்லை என்றும் கூறப்படுகிறது. அப்படியாக டிசம்பர் மாதம் 30 பேர்கள் மட்டும் லொட்டறி சீட்டுக்காக பணம் செலுத்தியுள்ளனர்.
அவர்களுக்கு புத்தாண்டு பரிசாக மொத்தம் ரூ 45 கோடி பரிசாக கிடைத்துள்ளது. எஞ்சிய 10 பேர்களும் தற்போது தங்கள் ஏமாற்றத்தை பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |