49 ஓட்டங்களுக்கு சுருண்ட அமீரகம்! 243 ரன் வித்தியாசத்தில் அமெரிக்கா இமாலய வெற்றி
ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில், அமெரிக்க அணி 243 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
சாய்தேஜா, மிலிந்த் சதம்
துபாயில் நடந்த ஐசிசி கிரிக்கெட் உலகக்கிண்ண லீக் இரண்டு போட்டியில், அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகள் மோதின. 
முதலில் ஆடிய அமெரிக்க அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 292 ஓட்டங்கள் குவித்தது. சாய்தேஜா முக்கமல்லா (Saiteja Mukkamalla) 137 ஓட்டங்களும் (3 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகள்), மிலிந்த் குமார் (Milind Kumar) 123 ஓட்டங்களும் (1 சிக்ஸர், 11 பவுண்டரிகள்) விளாசினர்.
பின்னர் களமிறங்கிய ஐக்கிய அரபு அமீரக அணி 22.1 ஓவரில் 49 ஓட்டங்களுக்கு சுருண்டது. ஜுனைத் சித்திக் (10) மட்டுமே இரட்டை இலக்க ஓட்டங்கள் எடுத்தார். 
ருஷில் உகர்கர் 5 விக்கெட்டுகளும், சௌரப் நெத்ரவல்கர் 3 விக்கெட்டுகளும், ஷுபம் மற்றும் மிலிந்த் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதன்மூலம் அமெரிக்க அணி 243 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. இது ஒருநாள் போட்டியில் அந்த அணியின் பாரிய வெற்றி ஆகும்.
CLEAN SWEEP ✅#TeamUSA win the 4th and last ODI of the CWC League 2 in Dubai by 243 runs! 💪#CWCL2 | #USAvUAE 🇺🇸 pic.twitter.com/8HsiN4SrCH
— USA Cricket (@usacricket) November 3, 2025
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |