இந்திய கடவுச்சீட்டு இருந்தால் மேலும் 6 நாடுகளிலிருந்து UAE-க்கு விசா இல்லாமல் நுழையலாம்
ஐக்கிய அரபு அமீரகம் (UAE), இந்திய கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு வழங்கும் Visa-on-Arrival திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளது.
பிப்ரவரி 13, 2025 முதல், கூடுதலாக 6 நாடுகளிலிருந்து வரும் இந்தியர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்குள் விசா இல்லாமல் நுழைய அனுமதி அளிக்கப்படும்.
முன்னதாக, இந்தியர்கள் அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய (EU) நாடுகளிலிருந்து செல்லுபடியாகும் விசாக்கள், வதிவிட அனுமதிகள் அல்லது Green Card வைத்திருந்தால் இந்த நன்மையைப் பெற முடியும்.
இப்போது இந்த திருத்தப்பட்ட கொள்கையின் கீழ், ஐக்கிய அரபு அமீரக அரசாங்கம் இந்த பட்டியலில் கூடுதலாக சிங்கப்பூர், ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் கனடா ஆகிய 6 நாடுகளைச் சேர்த்துள்ளது.
இதற்கு இந்திய பாஸ்போர்ட் குறைந்தபட்சம் 6 மாதங்கள் செல்லுபடியாக இருக்க வேண்டும்.
ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வந்து இறங்கியதும் 100 திர்ஹம் கொடுத்து 14 நாள் விசாவை பெற்றுக்கொள்ளலாம். மேலும், 14 நாட்கள் நீட்டிக்க 250 திர்ஹம் செலுத்த வேண்டும்.
தேவைப்பட்டால் மொத்தமாக 250 திர்ஹாம் செலுத்தி 60 நாள் விசாவை பெற்றுக்கொள்ளலாம்.
இந்திய-UAE உறவினை வலுப்படுத்தும் முயற்சி
இந்த விரிவாக்கம் தொழில்முனைவோர் மற்றும் திறமையான தொழிலாளர்களை UAE-யில் வேலை வாய்ப்புகளை ஆராய ஊக்குவிக்கும்.
மேலும், UAE-யின் பொருளாதார வளர்ச்சி மற்றும் சுற்றுலா வளர்ச்சிக்காக இந்த மாற்றம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய திட்டம், இந்தியர்களுக்கு UAE-யில் வாழ்க்கை, வேலை, மற்றும் தொழில் முனைவோர் வாய்ப்புகளை ஆராயும் ஒரு பெரும் வாய்ப்பாக அமைகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
UAE Visa-on-Arrival, Indian Passport Holders UAE Visa-on-Arrival