உக்ரைன்- ரஷ்யா செல்லும் விமானங்களை ரத்து செய்தது UAE
உக்ரைன்- ரஷ்யாவுக்கு செல்லும் விமானங்கள் அனைத்தையும் தற்காலிகமாக ரத்து செய்துள்ளது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்.
உக்ரைன் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் போர் பதற்றம் மேலும் மேலும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுக்க தயார் நிலையில் இருப்பதாக கூறி அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது அமெரிக்கா.
இதன் காரணமாக உக்ரைன் நாட்டுக்கு செல்லும் விமானங்களை பல்வேறு நாடுகள் ரத்து செய்துள்ளன.
அங்கு வசித்து வருபவர்களை உடனடியாக வெளியேற வேண்டும் என இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் அறிவுறுத்தி உள்ளன.
இந்நிலையில் அந்த நாடுகளுக்கு செல்லும் விமானங்கள் அனைத்தையும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அறிவித்துள்ளது.
மேலும் நிலைமை சீரானதும் மீண்டும் விமான போக்குவரத்து தொடங்கப்படும் என அந்த நாடு அறிவித்துள்ளது.
இதற்கிடையே ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுக்கும் எண்ணத்தைக் கைவிட வேண்டும் என்றும், அதை மீறி போரைத் தொடங்கினால் ரஷ்யா கடுமையான பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் எனவும் அமெரிக்கா எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.