ஃப்ளைதுபாய் விமான கடத்தல் முயற்சி: துணை விமானியின் பயங்கர திட்டம்: UAE வழக்கறிஞர் அதிர்ச்சி தகவல்
UAE Attorney General Reveals Flydubai Hijacking Plot: ஃப்ளைதுபாய் விமான கடத்தல் முயற்சி தொடர்பான புதிய அதிர்ச்சிகரமான தகவலை ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைமை வழக்கறிஞர் வெளியிட்டுள்ளார்.
நடுவானில் நடந்த கலவரம்
கடந்த செப்டம்பர் 30ம் திகதி துபாயிலிருந்து டெல் அவிவ் நோக்கி புறப்பட்ட ஃப்ளைதுபாய்(Flydubai) விமானம் FZ1073 சவுதி அரேபியாவின் தபூக்(Tabuk) விமான நிலையத்தில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது.

இஸ்ரேலிய நாட்டினர் உட்பட 174 பேருடன் நடுவானில் விமானம் சென்று கொண்டிருந்த போது, விமானத்தை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்கிய ஓமன் நாட்டு இணை விமானி ஹமாம் அல்-ஹம்மாமி-யின் முயற்சியை இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாரின் அபாரமான துணிச்சல் முடிவுக்கு கொண்டு வந்தது.
துணை விமானி ஹமாம் அல்-ஹம்மாமி காக்பிட்டிற்குள் கோடாரியால் தாக்கி படுகாயமடைந்த போதிலும், காக்பிட்டின் கதவை திறந்து விமான பயணிகளின் உதவியுடன் தாக்குதல்தாரியின் திட்டத்தை தடுத்து நிறுத்தினார்.
ஐக்கிய அரபு அமீரக வழக்கறிஞரின் அதிர்ச்சி தகவல்
இந்நிலையில் ஃப்ளைதுபாய் விமானத்தை கட்டுப்பாட்டில் எடுத்து பின்னர் அதை இஸ்ரேலின் பென் குரியன்() விமான நிலையத்தின் மீது மோத செய்ய தாக்குதலில் ஈடுபட்ட துணை விமானி ஹமாம் அல் ஹம்மானி திட்டமிட்டு இருந்தது விசாரணையில் தெரியவந்ததாக ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைமை வழக்கறிஞர் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளார்.

[1ICVK9 ]இந்த திட்டத்திற்காக விமான நிலையத்தின் அமைப்பையும், விமான வழித்தடத்தையும் முழுமையாக தெரிந்து கொள்வதற்காக கைது செய்யப்பட்ட துணை விமானி ஹமாம் அல் ஹம்மானி முன்னதாக டெல் அவிவ் நகருக்கு 2 விமான பயணங்களை மேற்கொண்டதாக புலனாய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும் இந்த தாக்குதல் திட்டம் 9/11 தீவிரவாத தாக்குதல்களால் ஈர்க்கப்பட்டு திட்டமிடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.