எகிப்து உலகக் கோப்பை அணிக்கு 59 SUV கார்களை பரிசளிக்கும் UAE தொழிலதிபர்
உலகக்கோப்பையில் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணியை கிட்டத்தட்ட தோற்கடித்த எகிப்து அணிக்கு UAE தொழிலதிபர் ஒருவர் SUV கார்களை பரிசாக அறிவித்துள்ளார்.
59 Mitsubishi SUV
ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரபல தொழிலதிபர் கலாஃப் அல் ஹப்தூர் (Khalaf Al Habtoor), எகிப்து உலகக் கோப்பை கால்பந்து அணிக்கும் அவர்களின் ஆதரவு குழுவினருக்கும் மொத்தம் 59 Mitsubishi SUV கார்கள் பரிசளிக்க உள்ளார்.

வரலாற்றில் முதன்முறை
எகிப்து அணி, உலகக் கோப்பை போட்டிகளில் வரலாற்றில் முதன்முறையாக Round-Off 16 சுற்றுக்கு முன்னேறியது.
இறுதியில் அர்ஜென்டினாவிடம் 3-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தாலும், அவர்களின் வீரத்தையும் உறுதியையும் உலகம் முழுவதும் பாராட்டியது.

அன்பும் நன்றியும்
எகிப்தின் மகிழ்ச்சி இன்று அனைத்து அரபு மக்களின் மகிழ்ச்சி என்றும், அதனால் எகிப்தின் வீரர்களுக்கு அன்பையும் நன்றியையும் தெரிவிக்கும் விதமாக இந்த பரிசை வழங்குவதாக அல் ஹப்தூர் குழுமத்தின் தலைவர் கலாஃப் அல் ஹப்தூர் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
வீரர்கள் மட்டுமல்லாமல், தொழில்நுட்ப, நிர்வாக மற்றும் மருத்துவ குழுவினருக்கும் கார்கள் வழங்கப்பட உள்ளன.
Order of Merit விருது
அணி எகிப்து திரும்பியபோது, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வரவேற்று கொடியசைத்து, வீரர்களின் பெயர்களை முழங்கினர்.
எகிப்து ஜனாதிபதி அப்துல் ஃபத்தாஹ் எல் சிசி, அணியினருக்கு ‘Order of Merit’ விருதையும் வழங்கினார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |