#StayStrongIndia இந்தியாவுக்கு நெகிழ்ச்சியூட்டும் வகையில் ஆதரவை தெரிவித்த அமீரகம்!
கொரோனா வைரஸால் தற்போது கொடூரமாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு நம்பிக்கை மற்றும் ஆதரவை அளிக்கும் விதமாக ஐக்கிய அரபு அமீரக அரசாங்கம் ஒரு நெகிழ்ச்சியூட்டும் செயலை செய்துள்ளது.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினசரி 3,00,000-க்கும் மேற்பட்ட புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ள நிலையில், தொற்றுநோயின் இரண்டாவது அலையுடன் இந்தியா போராடி வருகிறது.
இந்நிலையில், கொரோனாவுக்கு எதிரான மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இந்திய மக்களுக்கு ஆதரவையும் நம்பிக்கையையும் அளிக்கும் விதமாக தோழமை நாடான ஐக்கிய அரபு அமீரகம் ஒரு நெகிழ்ச்சியூட்டும் செயலை செய்துள்ளது.
⭐️As #India battles the gruesome war against #COVID19 , its friend #UAE sends its best wishes
— India in UAE (@IndembAbuDhabi) April 25, 2021
? @BurjKhalifa in #Dubai lits up in ?? to showcase its support#IndiaUAEDosti @MEAIndia @cgidubai @AmbKapoor @MoFAICUAE @IndianDiplomacy @DrSJaishankar @narendramodi pic.twitter.com/9OFERnLDL4
ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் உள்ள உலகின் மிக உயரமான (829.8 மீட்டர்) கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் நேற்றிரவு, இந்திய நாட்டு தேசிய கொடியின் படத்தை #StayStrongIndia என்ற நம்பிக்கையான சொற்களுடன் ஒளிரச்செய்துள்ளது.
அதேபோல், கலிஃபா பல்கலைக்கழகம், Abu Dhabi National Oil Company தலைமையகம் போன்ற பல முக்கிய கட்டிடங்களில் இந்தியாவின் மூவண்ணக் கொடி ஒளிரவைக்கப்பட்டன.
அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவரும் நிலையில், பார்ப்போரை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
We thank our friend #UAE for standing by us in these testing times.#IndiaUAEDosti
— India in UAE (@IndembAbuDhabi) April 26, 2021
?? ? ?? pic.twitter.com/fpqSyV5wfp
வானளாவிய கட்டிடமான புர்ஜ் கலிஃபா 829.8 மீட்டர் உயரம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய மருத்துவமனைகளில் மருத்துவ ஆக்ஸிஜன் மற்றும் படுக்கைகளின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் உரிய சிகிச்சை பெறமுடியாமல் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகிவருகின்றன.
இந்த நிலையில் இந்தியாவையும் ஆதரவாக பல நாடுகள் களமிறங்கியுள்ளனர். அவை திரவ ஆக்சிஜன், தடுப்பூசி உட்பட பல மருத்துவ உபகரணங்களை வழங்கி உதவிவருகின்றன.
சவூதி அரேபியாவும் 80 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜனை இந்தியாவுக்கு அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.