ஆயிரக்கணக்கான வங்காளதேச மக்களின் விசாக்களை திடீரென ரத்து செய்த UAE
UAE cancels 5,000 Bangladeshis’ work visas: ஐக்கிய அரபு அமீரகம் (UAE) சுமார் 5,000 வங்காளதேச குடியிருப்பு மற்றும் வேலை விசாக்களை திடீரென ரத்து செய்துள்ளது.
இதனால் அங்கு வேலை செய்து வந்த தொழிலாளர்கள், வணிகர்கள் மற்றும் நீண்டகால குடியிருப்பாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

பலர் குடும்பத்துடன் வங்காளதேசம் சென்றிருந்தபோது, தங்களின் விசா UAE-யில் ரத்து செய்யப்பட்டிருப்பதை அங்கு இருந்தபோது தான் அறிந்தனர். இதனால் அவர்கள் மீண்டும் UAE-க்கு திரும்ப முடியாமல், வேலை, வணிகம், குடும்பம் ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன.
சிலர் மின்னஞ்சல், மொபைல் செய்தி அல்லது UAE-யில் உள்ள ஸ்பான்சர் மூலம் விசா ரத்து செய்யப்பட்ட தகவலை பெற்றதாக தெரிவித்துள்ளனர். ஆனால், முன்கூட்டியே எச்சரிக்கை அல்லது தெளிவான காரணம் எதுவும் வழங்கப்படவில்லை.
பலர் பல ஆண்டுகளாக அமீரகத்தில் வாழ்ந்து, வணிகம் நடத்தி, சொத்து வாங்கி, குடும்பத்துடன் தங்கியிருந்த நிலையில் இந்த நடவடிக்கை அவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விசா ரத்துக்கு காரணம் தெளிவாக தெரியவில்லை. பாதுகாப்பு சோதனை, ஆவண பிரச்சினைகள், ஓன்லைன் செயல்பாடுகள் தொடர்பான சோதனைகள் போன்றவை காரணமாக இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
வங்காளதேச அரசு, UAE தூதரகத்துடன் தொடர்பு கொண்டு, சட்டப்படி தவறு செய்யாதவர்களின் வழக்குகளை மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என்று கோரியுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்ட வங்காளதேச வெளிநாட்டு தொழிலாளர்கள், தங்கள் குடும்பங்களுக்கு நிதி உதவி மற்றும் உடனடி தூதரக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |