ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைமுறைக்கு வந்த மிகப்பெரிய மாற்றம்!
ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்கள் முதல் முறையாக நேற்று வெள்ளிக்கிழமையில் வேலை செய்துள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இனி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் வார இறுதி (weekends) நாட்களாக மாற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அந்நாட்டில் வாசிக்கப்பவர்கள் வசிப்பவர்கள் முதல் முறையாக நேற்று வெள்ளிக்கிழமையன்று வேலை செய்துள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரக அரசாங்கம் ஜனவரி 1, 2022 முதல் வேலை வாரத்தில் (working week) மாற்றத்தை அறிவித்தது.
அதன்படி பொதுத்துறை ஊழியர்கள் வாரத்தில் நான்கரை நாட்கள் வேலை செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். அதாவது, திங்கள் முதல் வியாழன் வரை நான்கு நாட்களும், வெள்ளிக்கிழமை அரை நாளும் வேலை செய்யவேண்டும்.
அதேபோல், வார இறுதி விடுமுறையம் (weekend holidays) சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாற்றப்பட்டது, பள்ளிகளும் இதே போன்ற விதிகளை பின்பற்றப்பட உள்ளன. வெள்ளிக்கிழமைகளில் பள்ளிகள் அரை நாள் திறக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வார இறுதி நாட்கள் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இருந்தன.
"உலகளாவிய பொருளாதார வரைபடத்தில் நாட்டின் மூலோபாய நிலையை பிரதிபலிக்கும் வகையில், உலக சந்தைகளுடன் அமீரகத்தை சிறப்பாக சீரமைக்க" இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஐக்கிய அரபு அமீரக அரசு கூறியது.
நீண்ட வார இறுதியானது "உற்பத்தியை அதிகரிக்கும் மற்றும் வேலை-வாழ்க்கை சமநிலையை மேம்படுத்தும்" என்று அரசாங்கம் கூறியது.
தனியார் நிறுவனங்கள் தங்கள் வேலை நாட்களை மாற்றிக்கொள்ளும் சுதந்திரத்துடன் திங்கள் முதல் வெள்ளி வரை வேலை செய்ய அனுமதிக்கப்பட்டன.
ஐக்கிய அரபு அமீரக குடிமக்கள் கோவிட்-19 விதிகளைக் கடைப்பிடித்து வருகின்றனர், பலர் வீட்டிலேயே இருக்க விரும்புகிறார்கள்.
இந்த மாற்றங்களின் விளைவாக, நாடு வெள்ளிக்கிழமை தொழுகையை நிரந்தரமாக பிற்பகல் 1.15 மணிக்கு மாற்றியது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திருமதி சரோஜினிதேவி பாலேந்திரா
தாவடி, எசன், Germany, London, United Kingdom, Birmingham, United Kingdom
11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
திருமதி கெங்காரத்தினம் வல்லிபுரம்
வல்வெட்டித்துறை, சிங்கப்பூர், Singapore, London, United Kingdom
16 Apr, 2022
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022