ஈரானின் தாக்குதலை தவிர்க்க திட்டம் - 3 பில்லியன் டொலர், 2 டன் தங்கம் வழங்கிய UAE
uae gives gold, billions to iran avoid attack: அமெரிக்கா உடனான மோதலின் போது தங்கள் நாட்டின் மீதான தாக்குதலை தவிர்க்க ஈரானிற்கு 3 பில்லியன் டொலர் பணம், 2 டன் தங்கம், 15 விமானங்கள் ஆகியவற்றை ஐக்கிய அரபு அமீரகம் வழங்கியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தை தாக்கிய ஈரான்
கடந்த பிப்ரவரி 28 ஆம் திகதி இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரான் மீது தாக்குதலை தொடங்கியது.
இந்த தாக்குதலுக்கு பதிலடியாக மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கா ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.

இந்த பதில் தாக்குதலில் ஐக்கிய அரபு அமீரகமும் கடுமையான சேதத்தை சந்தித்தது. 12 பொதுமக்கள் உட்பட 15 பேர் உயிரிழந்தனர். துபாய் சர்வதேச விமான நிலையம் சேதமடைந்தது.
தற்போது அமெரிக்காவில் ஆயுத பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் தாக்குதலை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

மீண்டும் அமெரிக்கா தாக்குதலை தொடங்கினால் எங்களை நாட்டை தாக்க வேண்டாம் என ஐக்கிய அரபு அமீரகம் கேட்டுக்கொண்டுள்ளது.
ஈரானுக்கு 2 டன் தங்கம், 15 விமானங்களை வழங்கிய UAE
மேலும், ஐக்கிய அரபு அமீரகம் ஈரானிற்கு 3 பில்லியன் டொலர் பணம், 2 டன் தங்கம் ஆகியவற்றை விமானம் மூலம் அனுப்பி வைத்துள்ளது.

அந்த விமானம் ஆகஸ்ட் 11 மற்றும் 12 ஆகிய திகதிகளில் அபுதாபியிலிருந்து தெஹ்ரானின் மெஹ்ராபாத் விமான நிலையத்திற்கும், கராஜின் பயாம் விமான நிலையத்திற்கும் பயணித்து. ஒவ்வொரு முறையும், அது திரும்புவதற்கு முன்பு சுமார் ஒரு மணி நேரம் அங்கே இருந்துள்ளது.
முன்னதாக ஜூன் 8 அன்று அபுதாபியிலிருந்து தெஹ்ரானின் மெஹ்ராபாத் விமான நிலையத்திற்குப் பறந்து, 3 பில்லியன் டொலர்களைப் பரிமாற்றம் செய்திருந்தது.

மேலும், பயன்படுத்தப்பட்ட 15 பயணிகள் விமானத்தையும் ஈரான் விமான நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய ஐக்கிய அரபு அமீரகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், 15 விமானங்களை வழங்க உள்ளது. 2 ஏர்பஸ் ஏ320 விமானங்கள் ஏற்கனவே ஈரானுக்கு கொண்டு செல்லப்பட்டுவிட்டன.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலில் அழிக்கப்பட்ட ஈரானின் 30 க்கும் மேற்பட்ட பயணிகள் விமானங்களுக்குப் பதிலாக இந்த விமானங்கள் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மீண்டும் அமெரிக்கா உடன் மோதல் ஏற்பட்டால் தங்கள் நாட்டை தாக்க வேண்டாம் என சமாதானப்படுத்தும் முயற்சியாக ஐக்கிய அரபு அமீரகம் இத்தகைய முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |