3 நாடுகளுக்கு குடிமக்கள் செல்ல தடை - UAE அரசு அறிவிப்பு
தனது குடிமக்கள் 3 நாடுகளுக்கு செல்ல பயண தடையை UAE அரசு அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கு போர்
ஈரான் மற்றும் இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான போர் காரணமாக மத்திய கிழக்கு முழுவதும் போர் பதற்றம் நிலவி வருகிறது.

மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்கா ராணுவ நிலைகள் உள்ள நாடுகளின் மீது ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தியது.
தற்போது தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்யிருந்தாலும், ஹார்முஸ் முடக்கத்தால் மீண்டும் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கலாம் என்ற சூழலே உள்ளது.
மேலும், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
3 நாடுகளுக்கு பயண தடை
இந்நிலையில், தங்கள் நாட்டு குடிமக்கள் ஈரான், ஈராக், லெபனான் ஆகிய 3 நாடுகளுக்கும் செல்ல தடை விதித்துள்ளது.
In light of current developments, the Ministry of Foreign Affairs announces a travel ban on UAE nationals traveling to Iran, Lebanon, and Iraq. The Ministry calls on all UAE nationals currently in these countries to expedite their immediate return to the UAE. pic.twitter.com/irZaxadiw5
— MoFA وزارة الخارجية (@mofauae) April 30, 2026
இது குறித்து செய்து வெளியிட்டுள்ள அரசு செய்தி நிறுவனமான WAM, "தற்போதைய பிராந்திய நிலவரங்களைக் கருத்தில் கொண்டு, ஈரான் இஸ்லாமியக் குடியரசு, லெபனான் குடியரசு மற்றும் ஈராக் குடியரசு ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்யும் ஐக்கிய அரபு அமீரக நாட்டினருக்குப் பயணத் தடை விதிக்கப்படுவதாக வெளியுறவு அமைச்சகம் (MoFA) அறிவித்துள்ளது," என தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது ஈரான் நடத்திய தாக்குதலில், 2 ராணுவ வீரர்கள் மற்றும் 11 பொதுமக்கள் உயிரிழந்தனர்.
மேலும், பாதிக்கப்பட்ட நாடுகளில் தற்போது உள்ள ஐக்கிய அரபு அமீரக குடிமக்கள் அனைவரும் உடனடியாகத் திரும்புமாறு வலியுறுத்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |