சவூதியில் பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கான தடையை எதிர்த்து போராடிய லூஜின் அல் ஹத்லால் விடுவிப்பு
சவூதி அரேபியாவில் பெண்களின் உரிமைக்காகப் போராடிய ஆர்வலர் லூஜின் அல் ஹத்லால், 3 ஆண்டுகள் கழித்து சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
சவூதி அரேபியாவில் பெண்களின் உரிமைக்காக குரல் கொடுத்துவந்தவர் சமூக செயற்பாட்டாளர் லூஜின் அல் ஹத்லால். அவர் 2018-ல் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
அவரை சிறையில் அடைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சர்வேதச அளவில் கண்டணங்கள் எழுந்தன.
இந்நிலையில், 3 ஆண்டுகளுக்குப் பிறகு லூஜின் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சவூதி அரேபியாவில் பெண்களுக்கு பல கட்டுப்பாடுகள் உள்ளன. வாகனம் ஓட்டக்கூடாது, படம் பார்க்கக்கூடாது, எப்பொழுதும் முகத்தையும் உடலையும் முழுவதுமாக மறைத்தபடி பர்தா அணிந்திருக்கவேண்டும் என பல கட்டுப்பாடுகள் இருந்தன.
கடந்த 3 ஆண்டுகளில், இளவரசர் முகமது பின் சல்மானின் ஆட்சியில் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. இப்ப்போது சவூதியில் பெண்கள் படம் பார்க்க, வாகனம் ஓட்ட அனுமதிக்கப்படுகின்றனர்.
இதில் இளம் பெண் சமூக செயற்பாட்டாளர் லூஜின் அல் ஹத்லாலுக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.