ஹார்முஸ் நீரிணையில் ரகசியமாகத் தப்பிய ஐக்கிய அமீரக எண்ணெய் கப்பல்
ஈரானியப் படைகளின் கண்ணில் மண்ணைத் தூவி ஐக்கிய அரபு அமீரகமும் வாங்குபவர்களும், கச்சா எண்ணெய் நிரப்பப்பட்ட பல கப்பல்களைச் சமீபத்தில் ஹார்முஸ் நீரிணை வழியாக வெளியேற்றியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
நான்கு கப்பல்கள்
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் போருக்கு முன்பு ஐக்கிய அரபு அமீரகத்தின் வழக்கமான ஏற்றுமதிகளுடன் ஒப்பிடுகையில் தற்போது ரகசியமாக வெளியேறியுள்ள அளவுகள் மிகக் குறைவானவையே.

இருப்பினும், எண்ணெய் விற்பனையை அதிகரிப்பதற்காக உற்பத்தியாளர்களும் வாங்குபவர்களும் ஏற்கத் தயாராக இருக்கும் அபாயங்களை இவை வெளிப்படுத்தியுள்ளன.
ஏப்ரல் மாதத்தில், ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனம், வளைகுடாவிற்குள் உள்ள முனையங்களிலிருந்து நான்கு கப்பல்கள் மூலம் குறைந்தபட்சம் 4 மில்லியன் பீப்பாய்கள் அப்பர் ஜாகும் கச்சா எண்ணெயையும், 2 மில்லியன் பீப்பாய்கள் தாஸ் கச்சா எண்ணெயையும் ஏற்றுமதி செய்தது.
இது கப்பலில் இருந்து கப்பலுக்கு மற்றப்பட்டு, பின்னர் தென்கிழக்கு ஆசிய சுத்திகரிப்பு நிலையத்திற்கு எண்ணெயைக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஓமானில் உள்ள சேமிப்புக் கிடங்குகளில் இறக்கப்படவோ அல்லது நேரடியாகத் தென் கொரியச் சுத்திகரிப்பு நிலையங்களுக்குச் சென்றிருக்கலாம் என்றே தெரியவருகிறது.
சமீப வாரங்களில்
ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடியாக ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து முடக்கப்பட்டது. அதேவேளை அமெரிக்காவும் ஈரான் துறைமுகங்களுக்கு முற்றுகை அறிவித்தது.
சமீப வாரங்களில் ஈரானிய ஏற்றுமதியை முடக்கியுள்ள இந்த நிகழ்வு, உலகளாவிய எண்ணெய் விலைகளை ஒரு பீப்பாய்க்கு 100 டொலருக்கும் மேலாக உயர்த்தியுள்ளது.

போர் தொடங்கியதிலிருந்து, ADNOC நாளொன்றுக்கு 1 மில்லியனுக்கும் அதிகமான பேரல்கள் அளவிலான எண்ணெய் ஏற்றுமதியைக் குறைக்க வேண்டியிருந்தது.
அதன் ஏற்றுமதிகளில் பெரும்பாலானவை, உள்நாட்டு வயல்களில் இருந்து ஃபுஜைராவிற்கு குழாய் மூலம் ஏற்றுமதி செய்யப்படும் அதன் முர்பான் தரத்திலானவை ஆகும். ஹார்முஸ் நீரிணையில் ரகசியமாக வெளியேறிய மூன்று கப்பல்களும் கிரேக்க நிறுவனம் ஒன்றால் நிர்வகிக்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |