இந்தியர்களுக்கு வருகை விசாவில் தளர்வு வழங்கிய UAE: சுற்றுலா செல்ல யாரெல்லாம் தகுதியானவர்கள்?
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) இந்திய சுற்றுலா பயணிகளுக்கான கதவுகளை மேலும் திறந்துள்ளது.
இந்திய சுற்றுலா பயணிகளுக்கு விசா தளர்வு
நாட்டின் விசா கொள்கையில் குறிப்பிடத்தக்க தளர்வு ஏற்படுத்தி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) இந்திய பயணிகளுக்கு முக்கியமான தளமாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது.
விசா கொள்கை மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த தளர்வு காரணமாக அதிக எண்ணிக்கையிலான இந்தியர்கள் தற்போது வருகை விசா(Visa-on-arrival) பெற தகுதியானவர்களாக இருப்பார்கள் என வியாழக்கிழமை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் அடையாளம் மற்றும் குடிமக்கள், சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்புக்கான கூட்டாட்சி ஆணையம் (ICP) தெரிவித்துள்ளார்.
Update regarding Visa-on-arrival facility for Indian citizens travelling to the UAE pic.twitter.com/aFrqnX8jTx
— India in UAE (@IndembAbuDhabi) October 17, 2024
வருகை விசா என்றால் என்ன? (Visa-on-arrival)
வெளிநாட்டு குடிமகன் ஒரு நாட்டிற்கு வருகை தரும் போது அவருக்கு வழங்கப்படும் ஒரு வகை விசா தான் இந்த வருகை விசா(Visa-on-arrival) ஆகும்.
இந்த வருகை விசாவை பெற அந்த வெளிநாட்டு குடிமகன் குடிவரவு அதிகாரிகளால் வழி காண்பிக்கப்பட்ட ஆவணங்களுடன் விசா விண்ணப்பத்தை விமான நிலையத்தில் சமர்ப்பித்து பெற்று கொள்ளலாம்.
இந்தியர்களுக்கு தளர்த்தப்பட்ட வருகை விசா விதி
முன்னதாக, அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் அல்லது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான வசிப்பிட அல்லது சுற்றுலா விசாக்களை வைத்திருக்கும் இந்திய குடிமக்களுக்கு மட்டுமே வருகை விசா வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் புதிய கொள்கை ஐக்கிய இராச்சியம் அல்லது ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான சுற்றுலா விசாக்களை வைத்திருக்கும் இந்திய பாஸ்போர்ட் தாரர்களுக்கும் இந்த சலுகையை வழங்குகிறது.
கட்டணம்
60 நாள் வருகை விசாவில் இந்திய பயணிகளின் வருகையை ஏற்றுக்கொள்ள ICP 250 திர்ஹம் (சுமார் ரூ. 5,700) என்ற குறைந்த கட்டணத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த எளிமையான செயல்முறை நிச்சயமாக UAE ஐ இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு இன்னும் ஈர்க்கும் ஒன்றாக மாற்றும் என்பதில் மாற்று கருத்து இல்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |