ஈரான் மீது இரகசியமாகத் தாக்குதல் நடத்திய ஐக்கிய அரபு அமீரகம்
ஈரானில் ஒரு முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்தும் வகையில், ஐக்கிய அரபு அமீரகம் ரகசியத் தாக்குதல்களை நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
லாவன் தீவு
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான ஊசலாடும் அமைதி ஒப்பந்தம் முறியும் அபாயத்தில் உள்ள நிலையிலேயே ஐக்கிய அமீரகத்தின் தாக்குதல் தொடர்பானத் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் போர் நிறுத்தத்தை அறிவித்ததன் பின்னர், ஏப்ரல் மாத தொடக்கத்தில் இந்தத் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.
தாக்குதல்களில் ஒன்று பாரசீக வளைகுடாவில் உள்ள லாவன் தீவு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தைத் தாக்கியது; இது பெரும் தீ விபத்தை ஏற்படுத்தியதோடு, அந்நிலையத்தின் உற்பத்தியை மாதக்கணக்கில் முடக்கும் நிலைக்கு தள்ளியது.
அச்சமயத்தில், சுத்திகரிப்பு நிலையம் எதிரிகளால் தாக்குதலுக்கு உள்ளானதாக ஈரான் கூறியிருந்தது. மட்டுமின்றி, ஈரான் உடனடியாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குவைத்திற்கு எதிராக ஒரு எதிர்த்தாக்குதலைத் தொடங்கியது.
ஒப்புக்கொள்ளவில்லை
ஆனால், இதுவரை ஈரான் மீதானத் தாக்குதல் தொடர்பில் ஐக்கிய அரபு அமீரகம் வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவில்லை. இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான நெருங்கிய உறவுகளின் காரணமாக, போர் வெடித்ததிலிருந்து ஐக்கிய அமீரகமானது ஈரானின் முதன்மையான இலக்காக மாறியது.

இதனிடையே, ட்ரம்ப் விடுத்துள்ள மிரட்டலுக்கு பதிலளித்துள்ள ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப், தங்கள் இராணுவம் எதற்கும் தயாராக உள்ளதாகவும், எதிரிகள் கண்டிப்பாக அதிர்ச்சியடைவது உறுதி எனவும் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |