கனடாவில் 50 பில்லியன் டொலர் முதலீடு செய்யவுள்ள அரபு நாடு
ஐக்கிய அரபு அமீரகம், கனடாவின் முக்கிய துறைகளில் 50 பில்லியன் டொலர் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
இந்த பெரும் முதலீடு, இரு நாடுகளுக்கு இடையிலான முதலீட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி ஷேக் முகமது பின் சாயிக்கின் அறிவுறுத்தலின் பேரில், அபுதாபி இளவரசர் ஷேக் காலித் பின் முகமது இந்த முதலீட்டுத் திட்டத்தை அங்கீகரித்துள்ளார்.
கனடா பிரதமர் மார்க் கார்னி மற்றும் அமீரக முதலீட்டு அமைச்சர் முகமது அழ சுவைதி ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் பங்கேற்றனர்.

இந்த முதலீடு, கனடாவின் எரிசக்தி மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI), லாஜிஸ்டிக்ஸ், சுரங்கம் போன்ற முக்கிய துறைகளை உள்ளடக்கியுள்ளது.
இது இரு நாடுகளின் பொருளாதார உறவை வலுப்படுத்தும் முக்கியமான படியாக இருக்கும் என அமீரக முதலீட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2024-ஆம் ஆண்டில் கனடாவில் ஐக்கிய அரபு அமீரகத்தின் நேரடி முதலீட்டின் மதிப்பு 8.8 பில்லியன் டொலராக இருந்தது. அதனை பல மடங்கு உயர்த்தும் வகையில் இந்த புதிய திட்டம் அமைந்துள்ளது.
இதற்குமுன், 2024 அக்டோபரில் அமீரகம்-கனடா இடையே AI மற்றும் டிஜிட்டல் கண்டுபிடிப்புகள் தொடர்பான ஆரம்ப ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதன்படி, டேட்டா சென்டர்கள் மற்றும் AI திட்டங்கள் உருவாக்கும் வாய்ப்புகளை இரு நாடுளாலும் ஆராய்ந்து வருகின்றன.
இந்த 50 பில்லியன் டொலர் முதலீடு, இரு நாடுகளுக்கு இடையிலான உறவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் வரலாற்றுச் செயலாகக் கருதப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
UAE Canada 50 Billion Dollars investment, UAE energy sector investment, UAE AI projects in Canada, UAE Canada bilateral ties 2025, Sheikh Mohamed bin Zayed Canada deal, Mark Carney UAE Canada agreement, UAE foreign direct investment Canada, UAE Canada AI data centres, UAE clean energy collaboration, UAE Canada strategic partnership