ஏமனில் இருந்து வெளியேறிய கடைசி UAE படைகள்: அமைதிக்கு திரும்ப வேண்டுகோள்
தங்களுடைய கடைசி படைகளையும் ஏமனில் இருந்து வெளியேறி விட்டதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது.
ஏமனில் இருந்து வெளியேறிய படைகள்
ஏமன் நாட்டில் நிலை நிறுத்தப்பட்டிருந்த மீதமுள்ள தங்கள் படைகளும் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு விட்டதாக ஐக்கிய அரபு அமீரகம்(UAE) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
2019 ம் ஆண்டு தொடங்கப்பட்ட படிப்படியான வெளியேற்று நடவடிக்கையின் இறுதி நிலையில் தற்போது ஏமன் நாட்டில் நிலை கொண்டிருந்த அமீரகத்தின் எஞ்சிய சிறப்பு பயங்கரவாத எதிர்ப்பு படைகள் வெளியேறியுள்ளன.

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஆதரவு குழுக்கள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரித்த நிலையில் இந்த வெளியேற்ற அறிவிப்பானது வெளியாகியுள்ளது.
தாக்குதல் ஒரு காரணமாக பார்க்கப்பட்டாலும், UAE உடனான இருதரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் ரத்து, UAE படைகள் 24 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற சவுதி அரேபியாவுடன் நெருங்கிய உறவு கொண்ட ஏமனின் குடியரசு தலைவர் தலைமை கவுன்சில் எடுத்த சில முக்கிய முடிவுகளே காரணமாக உள்ளது.
அதே நேரம், பயங்கரவாத குழுக்கள் தங்கள் மோதல்களை குறைத்து கொண்டு அமைதிக்கு திரும்ப வேண்டும் என்றும் ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |