வெளிநாட்டில் வாங்கிய லொட்டரி டிக்கெட்டால் கோடீஸ்வரனாக மாறிய இந்தியர்! தேடி வந்த அதிர்ஷ்டம்
துபாயில் வசித்து வரும் இந்திய வம்சாவளி நபர் 2 கோடி ரூபாய் லொட்டரியில் பரிசாக வென்றிருப்பது, அவருக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Big Ticket Abu Dhabi நடத்திய வாரந்திர மில்லியன் லொட்டரி குலுக்கலில், துபாயில் வசித்து வரும் இந்திய வம்சாவளிட்யை சேர்ந்த Harun Sheikh இந்த வார வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு 1 மில்லியன் திர்ஹாம்(5,49,01,823 கோடி ரூபாய்) பரிசாக விழுந்துள்ளது. இது குறித்து இந்த லொட்டரி குலுக்கலை நடத்திய Big Ticket தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில், எங்களுடைய Big Ticket Abu Dhabi’s Weekly millionaire- லொட்டரி குலுக்கலில், ஒரு மில்லியன் திர்ஹாம் வென்ற Harun Sheikh-க்கு வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து Harun Sheikh கூறுகையில், நான் என்னுடைய வாழ்க்கையில் இதுவரை எதையும் வென்றது கிடையது. இந்த லொட்டரி குலுக்கல் நிச்சயமாக, என் வாழ்க்கையை மகிழ்ச்சியை கொடுக்கிறது என்று கூறியுள்ளார்.
டிசம்பர் மாதத்தின் ஒவ்வொரு வாரத்திற்கும், மில்லியனுருக்கான லொட்டரி குலுக்கலை இந்த நிறுவனம் நடத்தி வருகிறது. அதன் படி இதற்கான முதல் வாரத்தில் இவர் வென்றுள்ளார். Harun Sheikh இதற்கான லொட்டரி டிக்கெட்டை ஆன்லைனில் வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.