நாட்டையே உலுக்கிய காட்டுத்தீ... லாஸ் ஏஞ்சல்ஸ் ஊபர் சாரதி ஒருவர் குற்றவாளி என தீர்ப்பு
Uber driver has been found guilty of arson: ஊபர் சாரதி ஒருவர் தீ வைத்த குற்றத்திற்காகக் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டார்.
அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் சுற்றுப்புறங்களை எரித்து, 12 பேர்களின் உயிரைப் பறித்த பேரழிவு தரும் பாலிசேட்ஸ் தீயை மூட்டியதற்காக, முன்னாள் ஊபர் சாரதி ஒருவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார்.
லாஸ் ஏஞ்சல்ஸ்
30 வயதான ஜொனாதன் ரிண்டர்கெனெக்ட், 2025 புத்தாண்டு தினத்தன்று லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை மொத்தமாக தீக்காடாக்கிய குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டின் தொடக்கத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் மாலிபு பகுதிகளில் ஏற்பட்ட தீ, முழு குடியிருப்புப் பகுதிகளையும் எரித்துச் சாம்பலாக்கியது; இதில் 12 பேர் மரணமடைந்தனர் மற்றும் ஆயிரக்கணக்கான வீடுகள் அழிந்தன.
தீப்பிழம்புகளிலிருந்து தப்பிக்க பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேறினர்; முழு வீதிகளும் தரைமட்டமாகின. தீயில் எரிந்து சாம்பலானவற்றில் பிரபலங்களின் வீடுகளும் அடங்கும். பாரிஸ் ஹில்டனின் மாலிபு கடற்கரை இல்லமும், பில்லி கிறிஸ்டலின் பிரம்மாண்டமான வீடும் கூட எரிந்து சாம்பலாகின.
ரியாலிட்டி ஊடக நட்சத்திரங்களான ஸ்பென்சர் பிராட் மற்றும் ஹைடி மான்டாக் ஆகியோரின் வீடு தீயில் எரிந்து அழிந்தது; சன்செட் பவுல்வர்டின் சில பகுதிகளும் தீக்கிரையாகின.
2025-ஆம் ஆண்டு ஜனவரி 1-அன்று, லாச்மேன் (Lachman) பகுதியில் ஏற்பட்ட தீயை உண்டாக்க, ரிண்டர்கனெக்ட் (Rinderknecht) ஒரு லைட்டரைப் பயன்படுத்தியதாக அரசு தரப்பு சட்டத்தரணிகள் தெரிவித்தனர். அந்தத் தீ, பல நாட்களாக நிலத்தடி வேர்களில் கொழுந்துவிட்டு எரிந்தது.
பின்னர் பாலிசேட்ஸ் தீயாக மீண்டும் தரைக்கு மேலே வெடிடித்தது. பாலிசேட்ஸை நோக்கியிருந்த ஒரு குன்றின் மீது ஏறி தீ வைத்தபோது, ரிண்டர்கெனெக்ட் எல்லாவற்றின் மீதும் கோபமாகவும் விரக்தியாகவும் இருந்ததாக இந்த வாரம் இறுதி வாதங்களில் அரசுத் தரப்பு சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.

தீ வைத்தவரின் சட்டத்தரணிகள், பட்டாசுகளால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று வாதிட்டனர்; ஆனால், அதற்கு எவ்வித ஆதாரமும் இல்லாததால், விசாரணை அதிகாரிகள் அந்த வாய்ப்பை நிராகரித்துவிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
மறுவிசாரணைக்காக அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தபோது, மரக்கட்டைகளுக்குத் தீ வைத்தது தொடர்பான மூன்றாவது குற்றச்சாட்டை அரசுத் தரப்பு சட்டத்தரணிகள் கைவிட்டனர்.