பெண் ஓட்டுனர்களை ஈர்க்க Uber UK-வின் அதிரடி திட்டம்! இலவச குழந்தை பராமரிப்பு வசதி அறிமுகம்!
Uber UK, தங்கள் சாரதி தளத்தில் பெண் சாரதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில், ஒரு முன்னோடித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
Uber UK-வின் அதிரடி திட்டம்!
Uber UK, தங்கள் சாரதி தளத்தில் பெண் சாரதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில், 20 மணி நேரம் இலவச குழந்தை பராமரிப்பு வசதி வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
இந்த வசதி, 2025 ஆம் ஆண்டு முழுவதும், ஒரு பிரத்யேக நர்சிங் மற்றும் குழந்தை பராமரிப்பு செயலி மூலம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திட்டத்தின் முக்கிய நோக்கம்
Uber UK-ன் பொது மேலாளர் ஆண்ட்ரூ பிரேம், "எங்கள் Uber தளத்தில் அதிக பெண் சாரதிகளை ஈர்க்க நாங்கள் உண்மையிலேயே விரும்புகிறோம்" என்று திட்டத்தின் நோக்கத்தை தெளிவுபடுத்தினார்.
ஆரம்பத்தில், தற்போதுள்ள சாரதிகள் இந்த வசதியை பயன்படுத்த தொடங்குவார்கள் என்று பிரெம் எதிர்பார்ப்பதாக தெரிவித்த அவர், "இலவசமாக பயன்படுத்தி பார்ப்பதன் மூலம், குழந்தை பராமரிப்பு சேவையின் எளிமையை ஓட்டுனர்கள் அறிந்துகொள்ள முடியும்" என்று தெரிவித்தார்.
இந்த திட்டத்தின் செயல்திறனை மதிப்பீடு செய்து, 2025 ஆம் ஆண்டின் இறுதியில், அதன் எதிர்காலம் குறித்து Uber நிறுவனம் முடிவு செய்யும் என தெரியவந்துள்ளது.
சமீபத்திய வேலை நிறுத்தப் போராட்டங்களுக்கு பிறகு, சாரதிகளின் நியாயமற்ற ஊதியம் குறித்த கவலைகளை இந்த புதிய வசதி நிவர்த்தி செய்யும் என்றும், ஒரு ஆதரவான பணிச்சூழலை உருவாக்கும் என்றும் Uber நம்புகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |