கோட்டாபயவிற்கு இந்த பாவம் நிச்சயம் புரியும்! ராஜபக்ச குடும்பத்தின் நெருங்கிய உறவினர் காட்டம்
மகிந்தவுக்கு இழைக்கப்பட்ட துன்ப துயரங்களுக்கான எதிர்வினைகளை விதி கோட்டாபயவிற்கு வழங்கும் என ராஜபக்ச குடும்பத்தின் நெருங்கிய உறவினர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கைத் தூதுவரும், ராஜபக்ச குடும்பத்தின் நெருங்கிய உறவினருமான உதயங்க வீரதுங்க சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு கொடுத்த துன்ப துயரங்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நிச்சயமாக அனுபவிக்க நேரிடும்.
வரலாற்றில் எந்தவொரு தலைவரும் செய்யாத வகையில் மகிந்த ஆதரவாளர்களை துரத்தி துரத்தி தாக்கிய ரணிலை பிரதமர் பதவியில் அமரச் செய்ததன் பின்னணியில் இருப்பது மேற்குலக சதியாகும்.
மகிந்தவுக்கு இழைக்கப்பட்ட துன்ப துயரங்களுக்கான எதிர்வினைகளை விதி கோட்டாபயவிற்கு வழங்கும்.
அதிகாரம் கைவிட்டு போகும் போது கோட்டாபய அண்ணாவிற்கு இந்த பாவம் நிச்சயமாக புரியும் என தெரிவித்துள்ளார்.