சசிகலா குறித்து சர்ச்சை பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார் உதயநிதி ஸ்டாலின்!
சசிகலா குறித்த சர்ச்சை பேச்சுக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருந்த அந்த சர்ச்சை பேச்சுக்கு அவர் மன்னிப்பு கோரியுள்ளார்.
சொத்துகுவிப்பு வழக்கு காரணமாக பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா, இன்னும் சில நாட்களில் விடுதலையாகவுள்ளார். இதனால் அவரின் விடுதலையை பெரிய அளவில் வரவேற்க, அமமுக-வின் பல்வேறு திட்டங்களை வகுத்து வருகின்றனர்.
இந்நிலையில், விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் விழுப்புரம் மாவட்டத்தில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது சசிகலா குறித்து சில சர்ச்சைகளை வார்த்தைகளையும், பெண்களை புண்படும் வகையில் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது. அதற்கு உதயநிதி ஸ்டாலின், பெண்களை புண்படுத்தும் வகையில் நான் பேசவில்லை. அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது.
பெண்களின் மனம் புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன். கருணாநிதியும் ஸ்டாலினும் என்னை அப்படி வளர்க்கவில்லை.
நான் பிரசாரத்திற்கு செல்லும் இடமெல்லாம் பொய்யான அவதுாறு வழக்குகளை எதிர்கொண்டு வருகிறேன்.
சட்டத்துறை என்னை காப்பாற்றும் என்று நம்பித்தான் பல இடங்களில் சவால் விட்டு வருகிறேன் என்று கூறியுள்ளார்.