டெக்னிக்கல் தவறு தான்.., தவறாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்திற்கு உதயநிதி விளக்கம்
பிழையுடன் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
உதயநிதி விளக்கம்
தலைமை செயலகத்தில் இன்று முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.
அப்போது நிகழ்ச்சி தொடங்கியவுடன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய அரசு பெண் ஊழியர்கள் பாடலை பிழையுடன் தவறாக பாடினார்கள்.
பின்னர், நிகழ்ச்சி முடிந்து வந்ததும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் தவறாக பாடப்பட்டது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், "தவறாகப் பாடப்படவில்லை. டெக்னிக்கல் தவறு தான், மைக் சரியாக வேலை செய்யவில்லை. இரண்டு, மூன்று இடங்களில் அவர்கள் பாடியது சரியாக கேட்கவில்லை.
பின்னர், மீண்டும் முதலில் இருந்து தமிழ்த்தாய் வாழ்த்தை சரியாக பாடி இருக்கிறோம். தேவையில்லாமல் பிரச்சனைகளை கிளப்பி விடாதீர்கள்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |