பத்ரி படத்தில் நடித்த கராத்தே மாஸ்டருக்கு உடல்நலக்குறைவு.., ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கிய உதயநிதி
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட வில்வித்தை பயிற்சியாளர் ஷிஹான் ஹுசைனிக்கு தமிழக அரசு தரப்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
ரூ.5 லட்சம் நிதியுதவி
தமிழக மாவட்டமான மதுரையை சேர்ந்த கராத்தே மாஸ்டர் ஷிஹான் ஹுசைனி. இவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். முதல் முறையாக புன்னகை மன்னன் படத்தில் அறிமுகமானார்.
மேலும், விஜய் நடித்த பத்ரி படத்தில் கராத்தே சொல்லிக் கொடுக்கும் மாஸ்டராக நடித்திருந்தார். மேலும், 400-க்கும் மேற்பட்ட வில்வித்தை வீரர்களுக்கு வில்வித்தை பயிற்சியும் அளித்துள்ளார்.
இந்நிலையில், இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக சமூக வலைதளங்கள் மூலம் தெரிந்தது.
இதனிடையே, உதயநிதி ஸ்டாலினுக்கு தன் உடல்நிலை குறித்தும், வில்வித்தை பயிற்சியாளர்கள் குறித்தும் ஷிஹான் ஹுசைனி கடிதம் அனுப்பியிருந்தார்.
அதன்படி, ஷிஹான் ஹுசைனி மருத்துவ சிகிச்சை பெற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நிதியிலிருந்து ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்குவதாக துணை முதலமைச்சர் உதயநிதி உத்தரவிட்டார். அதன்படி, அதற்கான காசோலை ஷிஹான் ஹுசைனிக்கு வழங்கப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |