கணவனை தேடும் மனைவி கதை தமிழ்நாட்டுக்கே தெரியும் - உதயநிதி ஸ்டாலின் பதிலடி
சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் சொன்ன குட்டிக்கதைக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
முதல்வர் விஜய் குட்டிக்கதை
தமிழ்நாடு சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் விஜய், ஒரு குட்டிக்கதை சொல்வதாக கூறி, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை மறைமுகமாக குறிப்பிட்டு விமர்சனம் செய்தார்.

மேலும், இறுதியாக தனது உரையாக முடிக்கும் முன்னர், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் போல் கையால் சைகை செய்தார்.

முதலமைச்சர் விஜய் குட்டிக்கதை சொல்லும் முன்னரே திமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும் என குறிப்பிட்டுள்ளார்.
கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் scripted அவதூறுகளை அள்ளிவீசி acting performance காட்டி இருக்கிறார் முதலமைச்சர்.

பேரவையின் live Camera-வை, சினிமா camera என்று நினைத்துக் கொண்டு அவர் பேச, அதனை எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி single take-இல் shoot செய்ய வேண்டும் என்று பேரவைத்தலைவர் மெனக்கெட்டது ஏற்புடையது அல்ல.
முதலமைச்சரின் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் - பஞ்ச் டயலாக்கும் மட்டும் தான் இருந்ததே தவிர, மின்வெட்டு - விவசாயிகள் பிரச்சினை - மோசமாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு - வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்த பதிலும் இல்லை.
எதிர்க்கட்சிகள் தூண்டுதலில் விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை அவர் கொச்சை செய்ததுக் கண்டிக்கத்தக்கது.
குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது.
செங்கல்பட்டு கோர்ட்டில் கணவனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும்.
ஆகவே, முதலமைச்சர் விஜய் நடிகர் என்பதை மறந்து, இனியாவது தமிழ்நாட்டு முதலமைச்சராக முதலமைச்சர் நடந்து கொள்ள வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |