இனி இதுபோன்று நடக்காமல் பார்த்துக் கொள்வோம்.., மருத்துவர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு உதயநிதி பேச்சு
கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் கத்தியால் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு துணை முதலமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார்.
மருத்துவர் தாக்குதல்
தனது தாயாருக்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி விக்னேஷ் என்பவர், கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் பாலாஜியை கத்தியால் தாக்கியுள்ளார்.
இதில், மருத்துவரின் கழுத்து, காதின் பின்புறம், நெற்றி, முதுகு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தாக்கப்பட்டுள்ளது. பின்னர், மருத்துவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
மருத்துவர் ஒரு இதய நோயாளி என்பதால் 8 மணி நேரத்திற்கு பிறகே அவரது உடல்நிலை குறித்து தெரிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
மருத்துவரை தாக்கிய விக்னேஷை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்த்ரவிட்டுள்ளார்.
இந்நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சம்பவம் நடந்த மருத்துவமனைக்கு நேரில் ஆய்வு செய்தார். பின்னர், மருத்துவரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் அவர் பேசுகையில், "மருத்துவர் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படு வருகிறது. அவரது தலையில் 4 இடங்களில் கத்திக்குத்து ஏற்பட்டுள்ளது.
கடந்த 6 மாதங்களாக சிகிச்சை பெறும் தாயாருடன் இருப்பவர் என்பதால் சந்தேகம் எழவில்லை. இது தவிர்க்க முடியாத சம்பவம். இதுபோல் இனி நடக்காமல் பார்த்துக் கொள்வோம்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |