இந்தியாவே நேசிக்கும் தலைவர்.., அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த உதயநிதி
இந்தியாவே நேசிக்கும் மகத்தான தலைவராய் மிளிரும், தமிழ்நாடு முதலமைச்சர் என்று மு.க.ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உதயநிதி வாழ்த்து
திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், இனமானப் பேராசிரியர் வழியில், கழகத்தை வழிநடத்தும் கழகத்தலைவர், தமிழ்நாட்டு மக்களின் பேரன்பைப் பெற்று, திராவிட மாடல் நல்லாட்சி நடத்துவதுடன் மொழியுரிமை, மாநில உரிமைகளை வலியுறுத்தி, இன்று இந்தியாவே நேசிக்கும் மகத்தான தலைவராய் மிளிரும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.
`இளைஞர் அணிதான் என் தாய்வீடு’ என்று பெருமிதம் பொங்கச் சொல்லும் கழகத்தலைவர் இன்னும் பல்லாண்டு காலம் வாழ்ந்து எங்களை வழிநடத்த வேண்டுமென வாழ்த்துகிறோம்.
மக்கள்நலன் போற்றும் திராவிட மாடல் ஆட்சி 2026-இல் மீண்டும் அமைந்து கழகத்தலைவர் முதலமைச்சராகத் தொடர, இந்நன்னாளில் உறுதியேற்போம்! தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!" என்று பதிவிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |