தைரியம் இருந்தால் அண்ணாமலையை அண்ணாசாலைக்கு வரச்சொல்லுங்கள்- உதயநிதி சவால்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒருமையில் விமர்சித்தது தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
அவர் கூறியதாவது..,
மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு தேவையான நிதியை பெற்றுத்தர துப்பில்லை.
பாஜக தலைவர் அண்ணாமலையின் தரம் அவ்வளவு தான். பெரிதாக ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
தமிழகத்திற்கு தேவையான நிதியை வாங்கி தருவதை விட்டுவிட்டு பிரச்சனையை மடைமாற்றும் செயலில் அண்ணாமலை ஈடுபட்டுள்ளார்.
போஸ்டர் ஒட்டுவதாக கூறிய அண்ணாமலை தாராளமாக வரட்டும்.
அண்ணா அறிவாலயத்திற்கு வருவதாக சொன்னார். தைரியம் இருந்தால் அண்ணாமலையை அண்ணாசாலைக்கு வரச்சொல்லுங்கள்.
இது உதயநிதிக்கும் பாஜக தலைவருக்குமான பிரச்சனை இல்லை. தமிழகத்திற்கான நிதி உதவியை கேட்டு பெற வேண்டும்.
தனியார் பள்ளி என்ன சட்டவிரோதமாகவா நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். ஒன்றிய அரசிடம் அனுமதி வாங்கி தான் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்.
தனியார் பள்ளியில் காலையில் இலவச உணவு கொடுக்கிறார்களா? சீருடை இலவசமாக கொடுக்கிறார்களா? தயவுசெய்து இதை அதோடு ஒப்பிடாதீங்க. உத்திர பிரதேசம் கும்பமேளாவில் கூடிய கூட்டத்தை சமாளிக்க தெரியவில்லை.
வாரணாசியில் சிக்கித் தவிக்கும் மாற்றுத்திறனாளி வீரர்கள் விமானம் மூலம் அழைத்து வர தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது என்று கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |