கமல் ஹாசனை சந்தித்த உதயநிதி ஸ்டாலின்.., மாநிலங்களவை எம்பி சீட் குறித்து பேச்சுவார்த்தையா?
மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல் ஹாசனை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேசியுள்ளார்.
சந்திப்பு
நடிகரும், மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல் ஹாசனை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேசியுள்ளார். இவர்களின் சந்திப்பு சென்னையில் உள்ள கமல்ஹாசன் இல்லத்தில் நடைபெற்றுள்ளது.
அமெரிக்கா சென்று திரும்பிய கமல் ஹாசனை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் - கலைஞானி கமல் ஹாசன் சாரை இன்று அவருடைய இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தோம்.
அன்போடு வரவேற்று அரசியல், கலை என பல்வேறு துறைகள் சார்ந்து கருத்துக்களை பரிமாறிக்கொண்ட கமல் சாருக்கு என் அன்பும், நன்றியும்" என்று கூறியுள்ளார்.
இந்த பதிவுக்கு கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "நெடுநாள் நீடிக்கப் போகும் இனிய நினைவாக இந்தச் சந்திப்பு அமைந்தது.
அன்புத் தம்பியும், தமிழ்நாடு துணை முதலமைச்சருமான உதயநிதி அன்பிற்கும் பண்பிற்கும் என் நன்றி" என்று கூறியுள்ளார்.
இதனிடையே இவர்களின் சந்திப்பு அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை தூண்டியுள்ளது. அதாவது, திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவி மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தர உள்ள நிலையில் இருவரும் சந்தித்து பேசியது முக்கியமாக பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |