தமிழகத்தின் துணை முதல்வராகிறார் உதயநிதி.., அவர் வெளியிட்ட பதிவு
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தமிழகத்தின் துணை முதல்வராக பதவியேற்கவுள்ளார்.
துணை முதல்வராக உதயநிதி
தமிழக அமைச்சரவையில் செப் 28ஆம் திகதி அதாவது நேற்று மாற்றம் செய்யப்பட்டது.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராவதற்கான அறிவிப்பை ஆளுநர் மாளிகை நேற்று வெளியிட்டது.
புதிய அமைச்சர்களின் பதவியேற்பு விழா ஆளுநர் மாளிகையில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் என ஆளுநர் மாளிகை கூறியுள்ளது.
இந்நிலையில், தனக்கு பதவி வழங்கப்பட்டது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது X தளத்தில் பகிர்ந்துள்ளார்.
வெளியிட்ட பதிவு
அந்த பதிவில், "நம் பெருமைமிகு தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக பணியாற்றுவதற்கான வாய்ப்பை நமக்கு அளித்த முதல்வர் ஸ்டாலின் அவர்களை, பொதுச்செயலாளர் - பொருளாளர் மற்றும் அமைச்சர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றோம்.
'துணை முதலமைச்சர்' என்பது பதவியல்ல, பொறுப்பு.. என்பதை உணர்ந்து, தமிழ்நாட்டு மக்களின் ஏற்றத்துக்காக, தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வகுத்து தந்த பாதையில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டலில், சக அமைச்சர் பெருமக்களோடு இணைந்து பணியாற்றுவோம்.., அன்பும், நன்றியும்! என்று குறிப்பிட்டுள்ளார்.
நம் பெருமைமிகு தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக பணியாற்றுவதற்கான வாய்ப்பை நமக்கு அளித்த கழகத்தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களை, பொதுச்செயலாளர் - பொருளாளர் மற்றும் மாண்புமிகு அமைச்சர்களுடன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றோம்.
— Udhay (@Udhaystalin) September 28, 2024
‘துணை முதலமைச்சர்’ என்பது பதவியல்ல,… pic.twitter.com/x7InLzXoNc
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |