உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சரானால் வரவேற்போம்.. வேறு என்ன செய்ய முடியும்? சீமான் பேச்சு
தமிழகத்தின் துணை முதலைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றால் வரவேற்போம் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
சீமான் பேசியது
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே நாம் தமிழர் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் சந்திரசேகரன் நினைவேந்தல் நிகழ்ச்சியில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "தமிழகத்தின் துணை முதலைச்சராக உதயநிதி ஸ்டாலின் வந்தால் வரவேற்போம். வேறு என்ன செய்ய முடியும். அனைத்தையும் சகித்துக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளோம்.
என்னுடைய தம்பிகளின் வாக்குகளை பெறுவதற்காக தமிழ்ப் புதல்வன் என்ற திட்டத்தை கொண்டு வந்திருக்கின்றனர்.
தலித்துகள் முதலமைச்சராக முடியாது என்று திருமாவளவன் கூறிய கருத்தை நான் ஏற்கிறேன். ஆனால், திமுக அரசு மீது நம்பிக்கை இருக்கிறது என்று கூறியதை எதிர்க்கிறேன்.
நடிகர் விஜய் கட்சியின் மாநாட்டின் இட உரிமையாளர்களை மிரட்டுவதுதான் ஜனநாயகமா? இது கொடுமையான செயல். சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் தடுப்பு சட்டம் போடப்பட்டது அரசியல் பழிவாங்கல்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |