ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற தமிழன்! வாழ்த்து கூறிய உதயநிதி ஸ்டாலின்
சீனாவில் நடந்து வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தமிழக வீரர் விஷ்ணு சரவணன் வெண்கலப்பதக்கம் வென்றார்.
பாய்மர படகு போட்டி
ஹாங்ஷோவில் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகின்றது. இதில் இந்தியா 22 பதக்கங்களை வென்றுள்ளது.
போட்டியை நடத்தும் சீனா 70 தங்கத்துடன் 125 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது. ஆண்களுக்கான பாய்மர படகு போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த விஷ்ணு சரணவனன் 34 புள்ளிகளுடன் வெண்கலம் வென்றார். அவரை விட கூடுதல் புள்ளிகள் பெற்ற தென்கொரியாவின் ஹா ஜீமின் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
உதயநிதி வாழ்த்து
இந்த நிலையில் வெண்கலம் வென்ற தமிழருக்கு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'தமிழ்நாட்டின் பெயரை சர்வதேச அரங்குக்கு கொண்டு சென்று பெருமைப்படுத்திய தம்பி விஷ்ணு சரவணன் அவர்களை பாராட்டுகிறோம்' என குறிப்பிட்டுள்ளார்.
சீனாவின் ஹாங்சூ நகரில் நடைபெற்று வரும் #AsianGames2023- ல் பாய்மரப்படகுப் போட்டியில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த தம்பி விஷ்ணு சரவணன் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார்.
— Udhay (@Udhaystalin) September 27, 2023
தமிழ்நாட்டின் பெயரை சர்வதேச அரங்குக்கு கொண்டுசென்று பெருமைப்படுத்திய தம்பி விஷ்ணு சரவணன் அவர்களை…
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |