துருக்கியின் அழகான பெண் மனைவியாக வேண்டும் - உகாண்டா ராணுவ தளபதி வினோத நிபந்தனை
ஒரு பில்லியன் டொலரும், துருக்கியின் அழகான பெண் மனைவியாகவும் வேண்டும் என உகாண்டா ராணுவ தளபதி நிபந்தனை விதித்துள்ளார்.
உகாண்டா ராணுவ தளபதியின் நிபந்தனை
கிழக்கு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவின் ஜனாதிபதியாக உள்ளவர் யோவேரி முசெவேனி. இவரின் மகன் முஹூசி கைனருகபா(Muhoozi Kainerugaba), உகாண்டாவின் ராணுவ தளபதியாக உள்ளார்.

சமீபத்தில், துருக்கி தனக்கு ஒரு பில்லியன் டொலரும், அந்த நாட்டின் அழகான பெண்ணை மனைவியாகவும் வழங்க வேண்டும் என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சோமாலியா தலைநகர் மொகாடிசுவில் உள்ள துறைமுகம் மற்றும் விமான நிலையம் போன்ற உள்கட்டமைப்புகள் மூலம் துருக்கி பொருளாதார பலன்களை பெறுகிறது.
ஆனால், கடந்த 20 ஆண்டுகளாக சோமாலியாவில் உள்ள அல்-ஷபாப் போன்ற பயங்கரவாதக் குழுக்களுக்கு எதிராக உகாண்டா போரிட்டு பாதுகாப்பு பொறுப்பை சுமந்து வருகிறது.
This guy, Muhoozi Kainerubaga is the chief of the Ugandan 🇺🇬 Army, son of the dictator Museveni an possible future leader of the country
— Clément Molin (@clement_molin) April 11, 2026
Here, he is threatening Turkiye 🇹🇷, asking for 1 billion $ and the most beautiful turkish woman as a wife or he stops diplomatic relations. pic.twitter.com/xPORjQTVHm
இதற்கு இழப்பீடாகவே, ஒரு பில்லியன் டொலரும், அந்த நாட்டின் அழகான பெண்ணை மனைவியாகவும் வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளார்.
30 நாட்களுக்கு இந்த நிபந்தனையை ஏற்க மறுத்தால், துருக்கியுடனான தூதரக உறவுகள் துண்டிக்கப்படும், உகாண்டாவில் உள்ள துருக்கியின் தூதரகம் மூடப்படும், துருக்கி விமானங்களுக்கான உகண்டாவின் வான் எல்லை மூடப்படும் என தெரிவித்துள்ளார்.
முன்னதாக 2022 ஆம் ஆண்டில் உலகின் மிக அழகான 100 அங்கோலா பசுக்களை வழங்க தயாராக உள்ளேன், அதற்கு பதிலாக எனக்கு இத்தாலி பிரதமர் மெலோனியை திருமணம் செய்து தர வேண்டும் என சர்ச்சை கருத்தை தெரிவித்தார்.

இந்த சம்பவத்திற்கு அவரது தந்தை யோவேரி முசெவேனி மன்னிப்பு கேட்டார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |