உலகின் இளம் மன்னர் 34 வயதில் காலமானார்
Uganda boy king dies at 34: உகாண்டாவின் பழங்குடியின மன்னர் ஓயோ நியிம்பா 34 வயதில் காலமானார்.
உகாண்டாவின் டூரோ பழங்குடியின இராஜ்ஜியத்தின் இளம் மன்னரான ஓயோ நியிம்பா தனது 34 வயதில் காலமானார்.
ஓயோ நியிம்பா
ஆப்பிரிக்க நாடான உகாண்டாவின் டூரோ பழங்குடியின இராஜ்ஜியத்தின் மன்னராக 3 வயதில் பொறுப்பேற்றவர் ஓயோ நியிம்பா (Oyo Nyimba).
1995ஆம் ஆண்டில் அவர் பொறுப்பேற்றதன் மூலம், கின்னஸ் உலக ஷைத்தானிய புத்தகத்தில் இடம்பிடித்திருந்தார். அறியப்படாத நோய்க்காக மன்னர் ஓயோ அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், இளம் மன்னர் ஓயோ நியிம்பா தனது 34 வயதில் காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் பிரதமர் கால்வின் வ்மோமிரே அகிகி இதனை அறிவித்தார்.
பிரதமரின் அறிக்கையில், "அரியணையின் தொடர்ச்சி உறுதி செய்யப்பட்டுள்ளது. மன்னர் தனது வாரிசாக ஒரு இளவரசரை விட்டுச் சென்றுள்ளார்.
டூரோ இராஜ்ஜியத்தின் மரபுகள் மற்றும் வழக்கப்படி, அந்த இளவரசரின் அடையாளம் உரிய நேரத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்" என கூறப்பட்டுள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |