இனி ஆதார் நகல் வழங்க தேவையில்லை - வருகிறது புதிய விதி
ஆதார் நகல்களை விடுதி போன்ற இடங்களில் வாங்குவதை தடை செய்யும் வகையில் புதிய விதி அமுலுக்கு வர உள்ளது.
ஆதார் நகல்
இந்தியாவில், ஆதார் அட்டை குடிமக்களின் முக்கிய அடையாள ஆவணமாக கருதப்படுகிறது.

வங்கி கணக்கு தொடங்குவது தொடங்கி விடுதிகளில் அறை எடுப்பது வரை பல இடங்களில் ஆதார் நகல்களை வழங்க வேண்டிய தேவை உள்ளது.
இந்நிலையில், விடுதிகள் போன்ற இடங்களில் ஆதார் நகல்களை பெறவும், சேமிக்கவும் தடை விதிக்கும் வகையில் புதிய விதி அமுலுக்கு வர உள்ளது.

ஆதார் நகலை சேமிப்பதன் மூலம் தனிப்பட்ட தகவல்கள் கசிய வாய்ப்புள்ளதால், தனியுரிமைக்கு எதிரானது என கூறி இந்த புதிய விதியை அமுல்படுத்த UIDAI முன்வந்துள்ளது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
புதிய செயலி
ஆஃப்லைனில் ஆதார் சரிபார்ப்பை மேற்கொள்ள விரும்பும் நிறுவனங்கள், UIDAI யில் பதிவு செய்து, API அணுகலைப் பெற்று, அதன் மூலம் டிஜிட்டல் முறையிலே ஆதார் சரிபார்ப்பை மேற்கொள்ள முடியும்.
பயனர்கள் ஆதார் செயலி மூலம் தங்களது ஆதார் தகவலை வழங்கினால் போதுமானதாகும். QR Code மூலம் ஸ்கேன் செய்து சரிபார்ப்பை மேற்கொள்ள முடியும்.

இதற்கான புதிய செயலியை UIDAI சோதனை செய்து வருகிறது. இன்னும் 18 மாதங்களில் முழுவதுமாக நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த செயலியில் பயனர்கள் ஆதார் திருத்தங்களை மேற்கொள்வதோடு, போன் இல்லாத குடும்ப உறுப்பினர்களின் ஆதாரையும் நிர்வகிக்க முடியும்.
காகிதத்தைப் பயன்படுத்தாமல் ஆஃப்லைன் சரிபார்ப்பை மேம்படுத்தும், அதே நேரத்தில் பயனர்களின் தனியுரிமையைப் பாதுகாக்கும் மற்றும் ஆதார் தரவுகள் தவறாகப் பயன்படுத்தப்படும் அபாயத்தைப் பராமரிக்கும் என கூறப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |