இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்! வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.100 குறைவு
உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு சிலிண்டர் பெரும் பயனாளிகளுக்கு சிலிண்டரின் விலை ரூ.100 குறைக்கப்பட்டுள்ளது.
உஜ்வாலா திட்டம்
இந்தியாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டமாக உஜ்வாலா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதுவரை, இந்த உஜ்வாலா திட்டத்தின் கீழ் 9.6 கோடி குடும்பங்களுக்கு சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கடந்த மாதம் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த திட்டமானது, மேலும் 3 ஆண்டுகள் நீட்டிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால், கூடுதலாக 75 லட்சம் பேருக்கு இலவச கேஸ் இணைப்புகள் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டது.
சிலிண்டர் விலை குறைப்பு
இந்நிலையில், உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயனாளர்களுக்கு வழங்கப்படும் மானியம் ரூ. 200 -லிருந்து 300 ஆக உயர்த்துவதற்கான அறிவிப்பை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் வெளியிட்டார்.
அதனால், தற்போது வரை உஜ்வாலா திட்டத்தின் கீழ் உள்ள பயனாளிகள் 14.2 கிலோ சிலிண்டரை ரூ. 703 கொடுத்து வாங்கிய நிலையில், ரூ.100 குறைத்து ரூ. 603 செலுத்தினால் மட்டும் போதுமானது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |