பிரித்தானியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் Omicron! புதிதாக 25 பேருக்கு தொற்று உறுதி
பிரித்தானியாவில் புதிதாக 26 பேருக்கு Omicron தொற்று உறுத்தி செய்யப்பட்டுள்ளது.
சனிக்கிழமை இரவு வெளியான தகவல்களின்படி, இங்கிலாந்தில் மேலும் 24 பேருக்கும், ஸ்காட்லாந்தில் ஒருவருக்கும் Omicron தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த 25 பாதிப்புக்களுடன் சேர்த்து பிரித்தானியாவில் மொத்தம் 160 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை பதிவான பாதிப்புகள், கிழக்கு மிட்லாண்ட்ஸ், இங்கிலாந்து கிழக்கு, லண்டன், வடகிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு மற்றும் மேற்கு மிட்லாண்ட்ஸ் மற்றும் ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸின் சில பகுதிகளில் அடையாளம் காணப்பட்டுள்ளன.
வடக்கு அயர்லாந்தில் இதுவரை பாதிப்புகள் ஏதும் கண்டறியப்படவில்லை.
இந்த நிலையில், Omicron வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் 10 நாட்களுக்கு சுயமாக தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முந்தைய தொற்றுநோய்களிலிருந்து கிடைத்த நோய் எதிர்ப்பு சக்தியையும், தடுப்பூசிகளின் வீரியத்தையும் தவிர்க்கும் திறன் இந்த Omicron வைரசுக்கு இருக்கும் என கூறப்படுவதால், விஞ்ஞானிகள் இந்த வைரஸை 'மிகவும் கவலைக்குரியது' என்று விவரித்துள்ளனர்.
இந்நிலையில், பிரித்தானியா வரும் 7-ஆம் திகதி முதல் அதிகாலை 4 மணி முதல் புதிய பயணக்கட்டுப்பாடு விதிகளை அமுல்படுத்தியுள்ளது.