ஹேர்-டையினால் 27 வயது பிரித்தானியருக்கு நேர்ந்த பரிதாபம்! அதிர்ச்சியூட்டும் தோற்றம்
பிரித்தானியாவைச் சேர்ந்த 27 வயது இளைஞர் ஒருவர் Hair dye பயன்பாட்டினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
வெள்ளை முடியை மறைக்க Hair dye
Lancashireயில் உள்ள Blackburn பகுதியைச் சேர்ந்தவர் ரியான் பிரிக்ஸ். 27 வயதாகும் இவர் வெள்ளை முடியை மறைக்க Hair dye பயன்படுத்தியுள்ளார்.
ஆனால், அது அவரது உடலில் எதிர்வினையை ஏற்படுத்தியது. பிரிக்ஸின் முகம் முதலில் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து தலையில் வீக்கம் ஏற்பட்டது.
மேலும் வீக்கம் அதிகரிக்கவே பிரிக்ஸ் மருத்துவ உதவியை நாடியுள்ளார். அவரை பரிசோத்த மருத்துவர்கள் வீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவர 25 தினசரி மாத்திரைகளை வழங்குகிறார்கள்.
எரியும் உணர்வை அனுபவித்த பிரிக்ஸ்
பிரிக்ஸிற்கு அவரது தாயார் கருப்பு நிற முடி சாயத்தை (Black hair dye) வழங்கியுள்ளார். ஆனால் அது அவருக்கு தோலிற்கு எவ்வாறு வினைபுரியும் என்பதை அறியாமல் பிரிக்ஸ் பயன்படுத்தியிருக்கிறார்.
முதலில் எரியும் உணர்வை அனுபவித்த அவர், அது இயல்பானது எனக் கருதி பின்னர் உறங்க சென்றுள்ளார்.
சில மணிநேரங்களுக்குப் பின்னர் அவர் கண்விழித்தபோது, அவரது தலைமுடியைச் சுற்றி ஒரு செதில் சொறி உருவாகியிருக்கிறது.
ராட்சத பலூன் போல்
பின்னர் நம்பமுடியாத அரிப்பு அவரது தலையை ராட்சத பலூன் போல் மாற்றியது. அதன் பின்னரே மருத்துவமனைக்கு சென்ற பிரிக்ஸ் 13 மணிநேரம் கண்காணிக்கப்பட்டார்.
அதிர்ஷ்டவசமாக ஒரு வார சிகிச்சைக்குப் பிறகு வீக்கம் தீர்க்கப்பட்டது. இருப்பினும், ரியான் பிரிக்ஸ் தனது உச்சந்தலையில் சிரங்குகளுடன் இருப்பதாகக் கூறுகிறார்.
மேலும் அவர், "எனது உச்சந்தலையில் மஞ்சள் மற்றும் பச்சை சிரங்குகள் உள்ளன. ஆனால், என் முகம் இப்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |