பிரித்தானியாவில் பொலிஸ் வாகனம் மோதி A66 சாலையில் விபத்து: பலர் உயிரிழந்த சோகம்
Uk A66 road police vehicle crash: பிரித்தானியாவின் A66 சாலையில் பொலிஸ் வாகனம் மோதிய சம்பவத்தில் பலர் உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
A66 சாலை விபத்து
பிரித்தானியாவின் மிட்வோர்ஸ்பரோ அருகே A66 சாலையில் அதிகாலையில் நடந்த கோர விபத்தில் காவல் வாகனமும், வோக்ஸ்வாகன் பாசாட்(Volkswagen Passat) காரும் மோதிக் கொண்டது.
இந்த சம்பவம் சவுத் பேங்க் பகுதியில் அதிகாலை சுமார் 3.39 மணிக்கு நடந்த நிலையில் இதில் பலர் பரிதாபமாக உயிரிழந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தை தொடர்ந்து அவசர கால மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளை முன்னெடுத்ததாக கிளீவ்லேண்ட் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
விபத்தை தொடர்ந்து நோர்மான்பி சாலைக்கும் சர்ச் லேன் பகுதிக்கும் இடைப்பட்ட A66 சாலை முழுமையாக அடைக்கப்பட்டது.

மீட்பு குழுவினர் விரைந்து செயல்பட்டு அனைவரது உயிரையும் காப்பாற்ற தீவிரமாக முயற்சி செய்த நிலையில் பல நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்ட்டுள்ளனர்.
தற்போது உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் உயிரிழந்தவர்களின் சரியான எண்ணிக்கையை காவல்துறையினர் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |