கல்வியாளர்களின் ஆராய்ச்சிகளை உளவு நோக்கத்திற்காக பயன்படுத்தும் சீனா - பிரித்தானியா எச்சரிக்கை
UK accuses China of academic espionage in AI: கல்வியாளர்களின் ஆராய்ச்சிகளை உளவு நோக்கத்திற்காக சீனா பயன்படுத்திருவருவதாக பிரித்தானியா குற்றம்சாட்டியுள்ளது.
பிரித்தானியா எச்சரிக்கை
பிரித்தானியாவின் உளவு அமைப்பான MI5, சீனாவின் உளவு துறைக்கு (Ministry of State Security-MSS) நெருங்கிய தொடர்புடைய China General Technology Research Institute (CGTRI) என்ற அமைப்பு, பிரித்தானியாவில் உள்ள கல்வியாளர்களின் ஆராய்ச்சிகளை உளவு நோக்கத்திற்காக பயன்படுத்தி வருவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

MI5 வெளியிட்ட “Espionage Alert” அறிக்கையில், 100-க்கும் மேற்பட்ட பிரித்தானிய கல்வியாளர்கள், AI, சைபர் பாதுகாப்பு, மறைமுக தகவல் தொடர்பு, Steganography போன்ற துறைகளில் CGTRI நிதியுதவி பெற்ற திட்டங்களில் ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
MI5, “இந்த ஆராய்ச்சிகள் MSS-இன் உளவு திறனை மேம்படுத்தும் வகையில் பயன்படுத்தப்படுகின்றன” என்று தெரிவித்துள்ளது.
சீனா மறுப்பு
சீன தூதரகம், இந்த குற்றச்சாட்டுகளை “முழுமையாக கற்பனை செய்யப்பட்டவை” என்று மறுத்துள்ளது. மேலும், “இத்தகைய பொய்யான குற்றச்சாட்டுகளை நிறுத்த வேண்டும்” எனக் கூறியுள்ளது.
பிரித்தனையாவின் பாதுகாப்பு அமைச்சர் Dan Jarvis, அனைத்து பல்கலைக்கழக தலைவர்களுக்கும் கடிதம் எழுதி, சீன அமைப்புடன் உள்ள தொடர்புகளை உடனடியாக நிறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார்.
அவர், “சீன உளவு அமைப்பு கல்வியாளர்களின் திறமைகளை மறைமுகமாக பயன்படுத்த முயற்சிக்கிறது. இதற்கு எதிராக வலுவான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம், பிரித்தானியா-சீனா உறவுகளில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பக்கம், பிரித்தானியா சீனாவுடன் வணிக உறவுகளை மேம்படுத்த முயற்சிக்கிறது; மறுபக்கம், சீனாவின் உளவு நடவடிக்கைகள் குறித்து தொடர்ந்து எச்சரிக்கைகள் விடுக்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |